விஜய் தான் டார்கெட்டா? ரஜினியின் புத்தாண்டு வாழ்த்து வீடியோவுக்கு இப்படியும் காரணம் சொல்லுறாங்களே

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எது செய்தாலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெறும். இப்படி இருக்கும்போது, சமீப காலமாக அவரது நடவடிக்கைகள் அரசியல் களத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அதற்கு காரணம் நடிகர் விஜயின் அரசியல் என்ட்ரி என்று கூறப்படுகிறது. இப்படி இருக்கும்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் புத்தாண்டு வாழ்த்திலும் அரசியல் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ள புத்தாண்டு வாழ்த்து என்பது இதற்கு முன்னர் ரஜினி இப்படி வாழ்த்தியது இல்லை என்பதால் தனி கவனம் பெற்றுள்ளது. அதாவது அவரது நடிப்பில் கடந்த 1995ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான முத்து படத்தில் நடிகை மீனாவிடம் ரஜினி பேசும் வசனமான, "யாருக்கு தெரியும். நான் எப்போதும் போற ரூட்டை பற்றி கவலைப்படுவது கிடையாது. ஆண்டவன் மேலே பாரத்தை போட்டுட்டு, வண்டி எந்த ரூட்ல போகுதோ, சிவானு சொல்லிட்டு போயிட்டே இருக்க வேண்டியதுதான்" என்ற வசனத்தின் வீடியோ காட்சியைப் பகிர்ந்துள்ளார்.

Netizens Ask After Rajinikanth New Year Wish Has Any Political Hidden Agenda Against Vijay

சூப்பர் ஸ்டார் இதற்கு முன்னர் இப்படி புத்தாண்டு வாழ்த்து சொன்னது இல்லை என்பதால், இந்த வாழ்த்திலும் அரசியல் காரணம் இருக்குமா என்ற கேள்வியையும் சந்தேகத்தையும் ரசிகர்களும் இணையவாசிகளும் எழுப்பி வருகிறார்கள். நடிகர் விஜய்க்கும் ரஜினிக்கும் இடையில் பனிப்போர் நீண்டகாலமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. நான் விஜய்யை எனக்கு போட்டியாக நினைத்தால் அது எனக்கு கௌரவம் கிடையாது, விஜய் நான் பார்க்க வளர்ந்த பையன் என்று வெரி சிம்பிளாக பேசினார் ரஜினி.

விஜய் நடவடிக்கைகள்: இப்படி இருக்கும்போது கடந்த ஆண்டு வரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தார். ஆனால் இந்த ஆண்டு ரஜினிக்கு விஜய் வாழ்த்து சொல்லவில்லை. அதற்கு காரணம் கரூர் துயரச் சம்பவம் நடைபெற்ற சில மணி நேரங்களில் நடிகர் ரஜினி தனது சமூக வலைத்தளத்தில் தனது கருத்தை பதிவிட்டது தான் என்று கூறப்படுகிறது.

கோபத்தில் ரஜினி ரசிகர்கள்: இது ரஜினி ரசிகர்களுக்கே கொஞ்சம் ஆத்திரத்தைக் கொடுத்தது. இது மட்டும் இல்லாமல், விஜய் ரசிகர்கள் ரஜினி மற்றும் ரஜினி ரசிகர்களை மோசமாக விமர்சித்தும் வருகிறார்கள். இதனால் ரஜினி ரசிகர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். இப்படி இருக்கும்போது, கடந்த 1995ஆம் ஆண்டு வெளியான முத்து படக் காட்சியை பகிர்ந்து புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க காரணமே மிகவும் முக்கியமான அரசியல் காரணம் தான் என்று கூறப்படுகிறது.

Netizens Ask After Rajinikanth New Year Wish Has Any Political Hidden Agenda Against Vijay

விஜய்க்கு எதிராக: அதாவது, கடந்த 1996 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அப்போதைய முதலமைச்சராக இருந்த செல்வி. ஜெயலலிதாவை எதிர்த்தும் திமுகவுக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்தார். 1996 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இப்படி இருக்கும்போது, தற்போது முத்து படத்தின் காட்சியை பகிர்ந்து அந்த சம்பவத்தை தான் ரஜினி மறைமுகமாக தனது ரசிகர்களுக்கு தெரிவிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இவரது இந்த பதிவு அரசியல் தளத்திலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X