போறோம், மல்லுக்கட்டுறோம், கைதாகிறோம்: இது தான் விஷால் ஸ்க்ரிப்டா?
Recommended Video

சென்னை: விஷால் வீட்டிலேயே பிளான் பண்ணிவிட்டு வந்து கைதாகியுள்ளதாக சமூக வலைதளங்களில் பேச்சு கிளம்பியுள்ளது.
தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷாலை கண்டித்து தயாரிப்பாளர்கள் சிலர் சென்னை தி. நகர், அண்ணா சாலையில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்க கட்டிடங்களுக்கு பூட்டு போட்டனர்.
தி. நகர் அலுவலகத்திற்கு இன்று வந்த விஷால் பூட்டை உடைக்க முயன்று கைது செய்யப்பட்டார். அதன் பிறகு பூட்டு திறக்கப்பட்டது.

விஷால்
விஷால் கைதானது குறித்து தான் சமூக வலைதளங்களில் பேச்சாக உள்ளது. விஷால் திட்டம் போட்டு வந்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைதானதாக பேச்சு கிளம்பியுள்ளது.

போலீஸ்
ஆர்.கே. நகரில் தேர்தலின்போது வேட்புமனு நிராகரிக்கப்பட்டபோதும் விஷால் நடுத்தெருவில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அலுவலகத்திற்குள் நடந்தவற்றை வீடியோ எடுத்து அவரே மீடியாக்களுக்கு அனுப்பி வைத்தார். தற்போதும் கைதாவோம் என்று தெரிந்தே போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விஷால் ஒரு டிராமா கிங் என்கிறார்கள் நெட்டிசன்கள்.
கலாய்
விஷால் கைதானது குறித்து மீம்ஸ் போட்டு கலாய்க்கிறார்கள்.
தமிழ் ராக்கர்ஸ்
படம் என்று நினைத்துக் கொண்டு விஷாலை ரிலீஸ் செய்ய தமிழ் ராக்கர்ஸ் வந்துவிடப் போகிறது.
விளம்பரம்
அரசியலுக்கு வரத் துடிக்கும் விஷால் விளம்பரம் தேடுகிறார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது என்னடா, புரட்சி தளபதிக்கு வந்த சோதனை?


Click it and Unblock the Notifications











