twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பீட்டான்னா உங்களுக்கு என்னன்னே தெரியாது: விஷாலை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்

    By Siva
    |

    சென்னை: பீட்டா என்றால் தனக்கு என்னவென்று தெரியாது என கூறியுள்ள நடிகர் விஷாலை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

    நடிகர் விஷால் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசியதாகக் கூறி நெட்டிசன்கள் அவரை சமூக வலைதளங்களில் திட்டி வருகிறார்கள். நான் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசியது இல்லை என்று அவர் விளக்கம் அளித்தும் யாரும் நம்பத் தயாராக இல்லை.

    Netizens not ready to trust Vishal

    இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விஷால் பீட்டா என்றால் தனக்கு என்னவென்றே தெரியாது என கூறியுள்ளார். ஏற்கனவே அவர் மீது கடுப்பில் இருந்தவர்கள் அவரின் பேட்டியை பார்த்தததும் மேலும் கோபம் அடைந்துள்ளார்கள்.

    உங்களுக்கு பீட்டான்னா என்னவென்றே தெரியாது, இதை நாங்க நம்பணும் என்று ஆளாளுக்கு விஷாலை ட்விட்டரில் வறுத்தெடுத்து வருகிறார்கள். தமிழர்களுடன், தமிழர்களின் உணர்ச்சியுடன் விளையாட வேண்டாம் என சிலர் விஷாலை எச்சரித்துள்ளனர்.

    விஷாலை நெட்டிசன்கள் மோசமாக திட்டுவதால் தான் நாகரீகம் கருதி அந்த ட்வீட்டுகளை எம்பெட் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Netizens are not ready to trust Vishal when it comes to Jallikattu issue. Hence, they keep on trolling him on social media.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X