அய்யோ இது பிரதீப் ரங்கநாதன் இல்லை!.. அந்த பிக் பாஸ் பிரபலம்.. தீயாக பரவும் குழந்தைப்பருவ புகைப்படம்!

சென்னை: பிக் பாஸ் பிரபலம் ஒருவரின் குழந்தைப்பருவ புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. மேலும், ரசிகர்கள் இது லவ் டுடே ஹீரோ பிரதீப் ரங்கநாதன் புகைப்படமா? என கேள்வி கேட்டும் கிண்டலடித்தும் அந்த போட்டோவை அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

ஜெயம் ரவியை வைத்து கோமாளி படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அவர் இயக்கிய முதல் படமே மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அடுத்து இனிமேல் நாம் ஹீரோவாக தைரியமாக இறங்கலாம் என நினைத்த பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே படத்தில் தானே ஹீரோவாக நடித்து படத்தையும் தரமாக இயக்கி இருந்தார்.

Netizens shares GP Muthu childhood photo and says Pradeep Ranganathan childhood for fun

விக்னேஷ் சிவன் இயக்கத்தில்: அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்கும் வாய்ப்பை மிஸ் செய்த விக்னேஷ் சிவன் அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து எல்ஐசி படத்தை இயக்கி வருகிறார். லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார். சூர்யாவின் வணங்கான் மூலம் தமிழ் சினிமாவில் பெரிய என்ட்ரி கொடுக்க நினைத்தவர் அந்த படம் மிஸ் ஆன நிலையில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் அந்த படம் இந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Netizens shares GP Muthu childhood photo and says Pradeep Ranganathan childhood for fun

பிரதீப் ரங்கநாதன் போட்டோ இல்லை: அச்சு அசல் பிரதீப் ரங்கநாதன் மாதிரியே இருக்கே என சோஷியல் மீடியாவில் குழந்தைப்பருவ புகைப்படத்தை நெட்டிசன்கள் ஷேர் செய்து கலாய்த்து வருகின்றனர். ஆனால், இது பிரதீப் ரங்கநாதன் போட்டோ இல்லை. பிக் பாஸ் பிரபலமான ஜி.பி. முத்துவின் சைல்ட்ஹுட் போட்டோ தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Netizens shares GP Muthu childhood photo and says Pradeep Ranganathan childhood for fun

பிக் பாஸ் பிரபலம்: டிக் டாக் பிரபலமாக லெட்டர் படித்தே ரசிகர்களை கவர்ந்த ஜி.பி. முத்து ஏகப்பட்ட படங்களிலும் நடித்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் இதெல்லாம் நமக்கு செட்டாகாது. உள்ளே இருந்தோம் உள்ளதும் போய்விடும் என பயந்து ஒரே வாரத்தில் வெளியே ஓடி வந்து விட்டார்.

செம க்யூட்: சிறு வயதிலேயே ஜி.பி. முத்து செம க்யூட்டாக இருக்காரே என அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் அவருக்கு லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் போட்டு வருகின்றனர். சிலர், இந்த போட்டோக்களை எடுத்து பிரதீப் ரங்கநாதன் உடன் கம்பேர் செய்ய அப்படியே ஒத்துப் போகுதேப்பா என ஜி.பி. முத்துவின் புகைப்படங்களை தீயாக பரப்பி வருகின்றனர்.

Netizens shares GP Muthu childhood photo and says Pradeep Ranganathan childhood for fun

திருநங்கை கெட்டப்: வேட்டி சட்டையில் மினி அரசியல்வாதி மாதிரியே படங்களில் தலைக்காட்டி வரும் ஜி.பி. முத்து கடந்த ஆண்டு பம்பர், பாபா பிளாக்‌ஷீப் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். அடுத்து ஆர்வன் எனும் படத்தில் திருநங்கையாக நடித்து வரும் ஜி.பி. முத்து திருநங்கை கதாபாத்திரத்திற்காக தன்னை உருமாற்றிய புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார். தொடர்ந்து பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஜி.பி. முத்து ஹீரோவாகவும் சில படங்களில் நடிக்க முயற்சித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X