குஷ்பு ட்வீட் : மகா பிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா? பிரேம்ஜியை பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ் !
சென்னை : குஷ்புனாலே சும்மா கும்புனு ஜீராவில் ஊறவைத்த குலாப் ஜாமுன் போல இருப்பார். ஒட்டுமொத்த குஷ்பு ரசிகர்களும் இவரை கொண்டாட இதுதான் காரணம்.
ஆனால் சமீபகாலமா கடுமையான உடற்பயிற்சி செய்து வருஷம் 16 திரைப்படத்தில் பார்த்த குஷ்பு போல மாறி உள்ளார்.
சிக்குனு சிறுத்த இடையிலும் குஷ்பு அம்சமாத்தான் இருக்கிறார் இருந்தாலும், அந்த கொழு கொழு கன்னம் மிஸ்கிங் என்று குஷ்புவின் தீவிர ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

அண்ணாத்த படத்தில்
80களில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருந்த நடிகை குஷ்பு தற்போது, 40 வயதை கடந்த பின்னரும் மீண்டும் ஹீரோயின் லுக்கிற்கு மாறி அசர வைத்துள்ளார். நடிகை குஷ்பு, அண்மையில் ரஜினிகாந்த் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிகாந்தின் முறை பெண்ணாகாக நடித்திருந்தார். இந்த படத்திலும் குண்டு குண்டுனுதான் இருந்தார். இதன் பிறகு தான் ஒர்க்அவுட் செய்து தன் எடையை வெகுவாக குறைத்துவிட்டார். நாளுக்கு நாள் ஒல்லியாகிக் கொண்டே போகிறார் குஷ்பு.

விதவிதமான போஸ்
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் குஷ்பு, ஒரு செல்ஃபி பிரியை , காலை, மாலை என எப்போதும் செல்ஃபி எடுத்து அதை ட்விட்டரில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது இவர், டீ ஷர்டு மற்றும ஜீன்ஸ் பேண்டில் விதவிதமான போஸில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தை பதிவிட்ட சிறிது நேரத்திலேயே பலரின் மனதை கவர்ந்துள்ளது.

குஷ்பு அக்கா
இந்த புகைப்படத்தை பார்த்த சில ரசிகர்கள், குஷ்பு அக்கா நாளுக்கு நாள் இளமையாகிக் கொண்டே போகிறார். அவந்திகா, அனந்திதாவின் அக்கா மாதிரி ஆகிவிட்டார்.அழகாக இருக்கிறீர்கள், இருந்தாலும் பழைய குஷ்பு தான் டக்கர் என கூறியுள்ளனர்.
Recommended Video

மகா பிரபு
இந்த புகைப்படத்தை பார்த்த நடிகர் பிரேம்ஜி, வாயை பிளந்து கொண்டு ஆச்சரியத்துடன் பார்க்கும் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். பிரேம்ஜியின் இந்த ரிப்ளேவை பார்த்த ரசிகர்கள். மகா பிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா? என பிரேம்ஜியை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











