‘’முதலில் இவருக்கு கல்யாணத்தை பண்ணுங்க’’… முரட்டு சிங்கிள் பிரேம்ஜியை கலாய்க்கும் ரசிகர்கள் !

சென்னை : நடிகரும், பாடகருமான பிரேம்ஜியை அவரது ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

கங்கை அமரனின் மகனும், வெங்கட் பிரபுவின் சகோதரருமான பிரேம்ஜி சென்னை 28, சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, சமீபத்தில் வெளியான மாநாடு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

வெங்கட் பிரபுவின் பார்ட்டி மற்றும் ஜோம்பி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

முரட்டு சிங்கிள் பிரேம்ஜி

முரட்டு சிங்கிள் பிரேம்ஜி

எப்போதும் தன்னை முரட்டு சிங்கிள் என்று கூறிக்கொள்ளும் பிரேம்ஜிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. இவரின் திருட்டு முழிக்கே பல ரசிகர்கள் உண்டு. எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ணமாட்டோமா...என்ன கொடுமை சார் இதெல்லாம்... என ஒவ்வொரு படத்திற்கு ஏதாவது வசனத்தை சொல்லுவதை தனது ஸ்டைலாகவே வைத்து இருக்கிறார்.

காதல் கிசுகிசு

காதல் கிசுகிசு

கடந்த மாதம் தனது 42பிறந்த நாளை கொண்டாடிய பிரேம்ஜி தற்போது வரை முரட்டு சிங்கிளாகவே உள்ளார். சமீபத்தில் பாடகி வினைத்தாவை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், அதுவும் கடைசியில் ஒன்றுமே இல்லாமல் புஸ்சுனு போச்சு.

இதயத்தை பரிசாக அளித்தார்

இதயத்தை பரிசாக அளித்தார்

சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் பிரேம்ஜி, எந்த நடிகைகள் புகைப்படத்தை போட்டாலும், அதற்கு தனது இதயத்தை தவறாமல் பரிசாக அளித்து வருகிறார். சமீபத்தில் யாஷிகா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், தன் உள்ளாடைகளை ஒவ்வொன்றாக காட்டி எறிந்தார். இந்த வீடியோவிற்கு இதயம் துடிப்பது போல ஒரு வீடியோவை பரிசாக அளித்திருந்தார் பிரேம்ஜி.

கல்யாணம் பண்ணுங்க

கல்யாணம் பண்ணுங்க

இதைப்பார்த்த ரசிகர்கள் பலர் எந்த நடிகை போட்டோவை போட்டாலும் பிரேம்ஜிக்கு இதே வேலையாக இருக்காரு, முதலில் இவருக்கு கல்யாணம் பண்ணிவைங்கப்பா என்று மீம்ஸ் போட்டு பிரேம்ஜியை ஒரு நெட்டிசன்ஸ் பங்கமாக கலாய்த்து உள்ளார்.

என்னம்மா வாழ்றாரு

என்னம்மா வாழ்றாரு

மற்றொரு பிரேம்ஜியின் தீவிர ரசிகர் கல்யாணம் பண்ணிராத தலைவா.. அப்ப தான் இப்டி லாம் எப்பவும் ஜாலியா இருக்கலாம் என பல ரசிகர்கள் பிரேம்ஜியை ட்ரோல் செய்து வருகின்றனர். ஜாலியான மனுஷய்யா பிரேம்ஜி வாழ்க்கையை என்னம்மா வாழ்றாரு...என்னமோ போ மாதவா என ஜனகராஜ் சொல்லும் வசனம் தான் ஞாபத்திற்கு வருது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X