ஹீரோ .. ஹீரோ ..
பாபா படம் கைவிட்டுவிட்டதால் மீண்டும் ரவிக்குமாருடன் இணைந்து படையப்பா ஸ்டைலில் படம் எடுக்க முடிவு செய்துள்ளார்ரஜினி
பாபா படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்ற முனுமுனுப்பு எழுந்துள்ளதால் அதிரடியாக ஒரு ஹிட் படம் தர முடிவுசெய்துவிட்டார் ரஜினிகாந்த்.
இது தான் என் கடைசி படம் என்று சொல்லிக் கொண்டிருந்த ரஜினிக்கு பாபா கை கொடுக்கவில்லை. இதனால் படையப்பாவைஇயக்கிய கே.எஸ்.ரவிக்குமாருடன் இணைந்து புதிய படத்தைத் தர முடிவு செய்துள்ளார் ரஜினி.
பாபா படத்தையே முதலில் ரவிக்குமாரை வைத்து இயக்கத் தான் ரஜினி திட்டமிட்டிருந்தார். ஆனால், பஞ்ச தந்திரம் டைரக்ஷனில்அவர் பிசியாக இருந்ததால் இரண்டாவது சாய்சாக சுரேஷ் கிருஷ்ணாவை வைத்து படம் எடுத்தார்.
பாபா தனது ரசிகர்களுக்கு முழு அளவில் தீனி போடவில்லை என்பதால் ரவிக்குமாரின் டைரக்டஷனின் ஒரு படம் தரமும்முரமாகிவிட்டார் ரஜினி. அஜீத்தை வைத்து வில்லன் படத்தை இயக்கி வருகிறார் ரவிக்குமார்.
அது முடிந்தவுடன் ரஜினி புராஜெக்ட் தொடங்கும் என்று தெரிகிறது. இதில் ரஜினிக்கு ஜோடி சேரப் போவது சிம்ரன் என்கிறார்கள்.
பொங்கல் அல்லது தமிழ்ப் புத்தாண்டில் இந்தப் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்களாம். பொங்கல் அன்று வெளியிடகால அவகாசம் மிகக் குறைவாக உள்ளதால் தமிழப் புத்தாண்டுக்கு இந்தப் படம் வெளிவரக் கூடும்.
ரஜினிக்கு கதை தயாரிக்கும் வேலையில் ரவிக்குமாரும் அவரது அசோசியேட்களும் தீவிரமாகிவிட்டார்கள். இந்தப் படத்தில்ஆன்மிகம் ஒரு சொட்டு கூட இருக்கக் கூடாது என்று ரவிக்குமாரிடம் ரஜினி கூறிவிட்டதாகத் தெரிகிறது.
இது முழுக்க முழுக்க கலாட்டா, பைட், பாட்டுக்கள், டான்ஸ் நிறைந்த முழுக்க முழுக்க ரஜினி படமாக இருக்குமாம். பாபா படத்தைகோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கி கலங்கிப் போய் உள்ளவர்களுக்கு இந்தப் படம் மூலம் கை கொடுக்கத்திட்டமிட்டிருக்கிறார் ரஜினி.


Click it and Unblock the Notifications











