அடுத்த சூப்பர் ஸ்டார் “கருத்துக்கணிப்பில்” வென்றது விஜய் இல்லையாமே, அஜீத்தாமே!!
சென்னை: அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று ஒரு வார பத்திரிக்கை நடத்திய கருத்துக்கணிப்பில் உண்மையில் அஜீத் தான் வெற்றி பெற்றாராம்.
சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டுமே என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வாரப் பத்திரிக்கை ஒன்று அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று மக்களிடையே கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது.
கருத்துக்கணிப்பின் முடிவில் இளையதளபதி விஜய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வேறு ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அஜீத்
கருத்துக்கணிப்பில் கலந்து கொண்டவர்களில் ஏராளமானோர் அஜீத்துக்கு தான் வாக்களித்தார்களாம். குறைவானவர்களே விஜய்க்கு வாக்களித்தார்களாம்.

வித்தியாசம்
விஜய்யை விட அஜீத்துக்கு 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைத்ததாம். ஆனால் இது பற்றி யாரும் அஜீத்திடம் கூறவில்லையாம்.

தல
அஜீத் சூப்பர் ஸ்டார் பந்தயத்தில் இருந்து ஒதுங்கி உள்ளார். இந்நிலையில் கருத்துக்கணிப்பில் நீங்கள் தான் வெற்றி பெற்றுள்ளீர்கள் என்று அஜீத்திடம் தெரிவித்தாலும் அப்படியா என்று கேட்டுவிட்டு அவர் வேலையை பார்க்க சென்றுவிடுவார். அதனால் அவரிடம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

விஜய்யை யார் அறிவித்தது?
கருத்துக்கணிப்பை நடத்தியவர்களில் ஒருவர் தான் அஜீத் வெற்றி பெற்றிருந்தபோதிலும் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டாராக தேர்வானதாக அறிவித்தார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

விஜய்
விஜய்க்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர் பட்டாளம் ஏராளம் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி நன்றி
மகா கருத்துக்கணிப்பை நடத்தி என்னை அடுத்த சூப்பர் ஸ்டாராக தேர்வு செய்ததற்கு நன்றி என்று விஜய் அந்த வாரப் பத்திரிக்கைக்கு கடிதம் அனுப்பினார். பாவம் அவர் நன்றி கடிதம் எல்லாம் அனுப்பிய பிறகு இப்படி குண்டை போடுவது போல் இந்த தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











