'என்.ஜி.கே.' என்றால் என்ன?: பதில் அளிக்கும் செகண்ட் லுக் போஸ்டர் #NGKSecondLook

By Siva

சென்னை: செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் என்.ஜி.கே. படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் என்.ஜி.கே. இந்த படத்தில் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் என்று இரண்டு ஹீரோயின்கள் உள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மாஸாக இருந்தது.

இந்நிலையில் இன்று செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும் என்று அறிவித்தனர். அறிவித்தபடி செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

போஸ்டர்

என்.ஜி.கே. என்றால் என்னவாக இருக்கும் என்று சூர்யா ரசிகர்கள் குழம்பிக் கொண்டிருந்தனர். அந்த குழப்பத்திற்கு இன்று தீர்வு கிடைத்துள்ளது. என்.ஜி.கே. என்றால் நந்த கோபாலன் குமரன். இந்த படம் தெலுங்கில் நந்த கோபால கிருஷ்ணா என்ற பெயரில் வெளியாக உள்ளது.

ரிலீஸ்

இன்று மாலை 6 மணிக்கு போஸ்டர் வெளியிடப்படும் என்று கூறிவிட்டு முன்கூட்டியே வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் 6 மணிக்கு இன்னொரு போஸ்டர் வெளியிடுமாறு கோரிக்கை எழுந்துள்ளது.

தீபாவளி

போஸ்டரில் தீபாவளி ரிலீஸ் என்று எழுதப்படாதது சூர்யா ரசிகர்களை கவலை அடைய வைத்துள்ளது. தீபாவளி ரிலீஸ் என்று கூறி இன்னொரு போஸ்டர் மூலம் அறிவிப்பு வெளியிடுமாறு தயாரிப்பாளர் பிரபுவை கேட்டுக் கொண்டுள்ளனர்.

சூர்யா

போஸ்டர் ஆன்லைனில் வெளியான வேகத்தில் பிரிண்ட் போட்டு சுவர்களில் ஒட்டிவிட்டனர் சூர்யா ரசிகர்கள். தீயா வேலை செய்கிறார்கள் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X