சிரிப்பு கலவரத்துக்கு தயாராகுங்க மக்களே... நிவின் பாலி கோரிக்கை
கொச்சி : நடிகர் நிவின் பாலியின் அடுத்த படம் கனகம் காமினி கலகம்.
இந்தப் படம் வரும் 12ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது.
இதையடுத்து தனது ரசிகர்களுக்கு நிவின் பாலி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

ஓடிடியில் ரிலீசாகும் மலையாள படங்கள்
கொரோனா காரணமாக மலையாள திரைப்படங்களின் பாதிப்பு அதிகரித்துள்ளது. அதிகமான படங்கள் ஓடிடியில் ரிலீசாகி வருகிறது. மோகன்லாலின் வரலாற்று பின்னணியுடன் எடுக்கப்பட்டுள்ள மரக்கார் படமும் ஓடிடியில் ரிலீசாக உள்ளது. இதேபோல பகத் பாசில், பிருத்விராஜ், ஜெயசூர்யா உள்ளிட்டவர்களின் படங்கள் ஓடிடியில் ரிலீசாக உள்ளன.

கனகம் காமினி கலகம் படம்
இந்நிலையில் நடிகர் நிவின் பாலி, வினய் போர்ட், வின்சி அலோசியஸ், ஜாபர் இடுக்கி, கிரேஸ் ஆன்டனி உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகியுள்ள கனகம் காமினி கலகம் படமும் ஓடிடியில் ரிலீசாக உள்ளது. வரும் 12ம் தேதி இந்தப் படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலீசாக உள்ளது.

ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கம்
ரதீஷ் பாலகிருஷ்ணன் பொதுவாள் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இவர் முன்னதாக ஆன்ட்ராய்ட் குஞ்சப்பன் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் தமிழில் கூகுள் குட்டப்பா என்ற பெயரில் ரீமேக் செய்யப்படவுள்ளது. படத்தை கேஎஸ் ரவிக்குமார் தயாரித்து நடித்துள்ளார்.

அதிகமான எதிர்பார்ப்பு
இந்நிலையில் கனகம் காமினி கலகம் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. படம் திரையரங்குகளில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. திடீரென படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது.

சிரிப்பு கலவரம்
இதனிடையே சிரிப்பு கலவரத்துக்கு தயாராகுமாறு நிவின் பாலி தனது ரசிகர்களை ட்விட்டர் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார். படம் 12ம் தேதி ஓடிடியில் ரிலீசாக உள்ளதையும் குறிப்பிட்டுள்ள அவர், படத்தின் போஸ்டரையும் பகிர்ந்துள்ளார்.

காமெடி கலாட்டா
காமெடி கலாட்டாவாக இந்தப் படம் உருவாகியுள்ளது. படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவற்றை இதை பார்க்க முடிகிறது. நிவின் பாலியும் வித்தியாசமான கெட்டப்பில் படம் நெடுகிலும் காணப்படுகிறார். மொத்தத்தில் இந்தப் படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











