த்ரிஷா ஒரு பக்கம் நயன் தாரா ஒரு பக்கம்... மச்சக்கார நிவின் பாலி
த்ரிஷா இல்லனா நயன் தாரா என்று தான் சொல்வோம். ஆனால் த்ரிஷாவோடு மட்டுமல்லாமல் நயன்தாராவுடனும் ஒரே நேரத்தில் நடிக்கிறார் நிவின் பாலி.
டாப்பில் இருக்கும் ஹீரோவுடன் நடிக்கத்தான் நடிகைகள் போட்டிப் போடுவார்கள். ப்ரேமம் படத்துக்கு பின் நிவின் பாலியின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் ஏறியிருக்கிறது.

தென்னிந்திய மொழிகளில் அனைத்திலும் பரிச்சயமாகிவிட்ட நிவின் பாலியுடன் நடிக்க முன்னணி நடிகைகள் போட்டிப் போடுகிறார்கள். இளம் ஹீரோக்களுடன் நடிப்பதை தற்போது அதிகம் விரும்பும் த்ரிஷாவும் நயன்தாராவும், நிவின் பாலி ஹீரோ என்றவுடன் ஓகே சொல்லியிருக்கிறார்கள். இரண்டு படங்களுமே தமிழ், தெலுங்கு, மலையாளம் மூன்று மொழிகளிலும் தயாராகின்றன.
என்ன நயனுக்கு சம்பளம் கோடிக்கணக்கில்... த்ரிஷாவுக்கு லட்சங்களில்தான்.
Comments


Click it and Unblock the Notifications