என் நண்பன் சிம்பு போல வருமா: உருகும் தனுஷ்
சென்னை: சிம்புவும், தானும் நல்ல நண்பர்கள் என்று நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் அஜீத்தும், விஜய்யும் எலியும், பூனையுமாக இருந்து பின்னர் ராசியானார்கள். அதே போன்று தனுஷும், சிம்புவும் முட்டி மோதிக் கொண்டு பின்னர் நண்பேன்டா ஆனார்கள். இது ஊடகங்களில் இத்தனை காலம் வந்த செய்தி.
இது குறித்து தனுஷ் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

நிறைய வேற்றுமை
என்னையும், சிம்புவையும் பற்றி பேசுகையில் நாங்கள் எதிரிகள் போன்று பேசினார்கள். ஏன் நாங்கள் பேசிக் கொண்டாலே சர்ச்சை ஆக்கினார்கள். எங்கள் இருவருக்கு இடையேயும் நிறைய வேற்றுமை உள்ளது. நான் எதையும் படபடவென்று செய்வேன். அவர் நிறுத்தி நிதானமாக செய்வார் என்றார் தனுஷ்.

2 பேரும் கும்ப ராசி
நானும், சிம்புவும் கும்ப ராசிக்காரர்கள். எங்களுடையது சதய நட்சத்திரம். இது தவிர எங்களுக்குள் வேறு ஒரு ஒற்றுமையும் உள்ளது. அது என்னவென்றால் எங்கள் 2 பேரையும் புரிந்து கொள்வது மிகவும் கடினம். ஆரம்பத்தில் நாங்கள் சரியாக பேசிக் கொள்ளாததால் எங்களுக்கிடையே பலர் பெரிய இடைவெளியை உருவாக்கிவிட்டனர் என்று தனுஷ் கூறினார்.

பிரச்சனை இல்லை
எனக்கும், சிம்புவுக்கும் இடையே பர்சனலாக எந்த பிரச்சனையுமே இல்லை. அதே சமயம் மற்றவர்கள் எங்களுக்கு இடையே தொழில்ரீதியாக ஒரு போட்டியை உருவாக்கிவிட்டாலும் நாங்கள் ஒருவர் மீது மற்றொருவர் பொறாமை கொள்ளாமல் இருக்கிறோம் என்று தனுஷ் தெரிவித்தார்.

நண்பேன்டா
நாங்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு நல்ல நண்பர்களாக உள்ளோம். இப்படி எல்லாம் நடந்தது நல்ல விஷயம் என்றார் தனுஷ்.


Click it and Unblock the Notifications











