'சிட்டிசன் கே' புத்தகத்தில் என்னை பற்றி கிளுகிளுப்பான கிசுகிசுக்களை எதிர்பார்த்தால்..: கமல்
சென்னை: என் வாழ்க்கை பற்றி ஹரிஹரன் எழுதியுள்ள புத்தகத்தில் என் சொந்த வாழ்க்கை தொடர்பான விஷயங்களை எதிர்பார்ப்பவர்களுக்கு ஏமாற்றம் தான் என்று கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார்.
பிரசாத் பிலிம் அகாடெமியின் முதல்வரும், பத்திரிக்கையாளரும், கமல் ஹாஸனின் மிகப் பெரிய ரசிகருமான ஹரிஹரன் உலக நாயகன் பற்றி சிட்டிசன் கே என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

இது குறித்து கமல் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கிசுகிசுக்களை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த புத்தகம் ஏமாற்றத்தை அளிக்கும். சிட்டிசன் கே என் சினிமா பணியை பற்றி மட்டும் தான். ஹரிஹரன் என் சினிமா வாழ்க்கையை அருகில் இருந்து பார்த்து வருபவர். அதனால் இந்த புத்தகம் என் சினிமா வாழ்க்கையை பற்றியது மட்டுமே.

என் சொந்த வாழ்க்கை பற்றி எழுதினால் அது சிலரின் மனதை புண்புடுத்தும். அதனால் நான் என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி எழுத அனுமதி அளிக்கவில்லை. இது என் வேலையை பற்றியது என்பதால் சரி என்று கூறினேன் என்றார்.


Click it and Unblock the Notifications











