எங்க வீட்டு பெண்களிடம் வாலாட்ட யாருக்கும் தில் இல்லை: நடிகர் பெருமிதம்

By Siva

மும்பை: எங்கள் வீட்டு பெண்களிடம் தவறாக நடந்து கொள்ள யாருக்கும் தைரியம் இல்லை என்று பாலிவுட் நடிகர் சயிஃப் அலி கான் தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் திரும்பும் பக்கம் எல்லாம் மீ டூ என்ற குரல் கேட்கிறது. இந்நிலையில் மீ டூ குறித்து பாலிவுட் நடிகர் சயிஃப் அலி கான் பேசியுள்ளார். சயிஃபின் அம்மா சர்மிளா தாகூர், தங்கை சோஹா அலி கான், மனைவி கரீனா கபூர், மகள் சாரா அலி கான் என்று 4 பெண்கள் சினிமா துறையில் உள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து சயிஃப் கூறியதாவது,

மனைவி

மனைவி

என் வீட்டு பெண்களிடம் யாரும் தவறாக நடந்து கொள்ள மாட்டார்கள். என் அம்மா, மனைவி அல்லது தங்கை என யாரிடமும் தவறாக நடந்து கொள்ளும் தைரியம் யாருக்கும் இல்லை என்றே நினைக்கிறேன். எனக்கு ஏன் இப்படி தோன்றுகிறது என்று தெரியவில்லை. அவர்களை சுற்றி பாதுகாப்பு உள்ளது.

மீ டூ

மீ டூ

பாதுகாப்பு இல்லாத பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். நாம் அனைவருக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும். சம்பவம் நடந்த உடனே பெண்கள் தைரியமாக புகார் தெரிவிக்கும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது. இது நல்லது. இந்த மீ டூ இயக்கம் தொடர்ந்து இருக்கும் என்று நம்புகிறேன். இந்த இயக்கம் விரைவில் காணாமல் போய்விடாமல் இருக்க வேண்டும்.

தைமூர்

தைமூர்

என் 2 வயது மகன் தைமூர் மீது மக்களுக்கு அப்படி என்ன ஆர்வம் என்று தெரியவில்லை. அவன் எங்கு சென்றாலும் மீடியா ஆட்கள் புகைப்படம் எடுக்கிறார்கள். அதனால் எனக்கு பிரச்சனை இல்லை. ஆனால் மீடியாவின் கவனம் இல்லாமல் இருந்தால் நல்லது என்று நினைக்கிறேன். மீடியாவுக்கு பிடித்தால் மக்களுக்கும் பிடிக்கும். ஆனால் நான் அடுத்தவர்களின் குழந்தைகள் மீது ஆர்வம் காட்ட மாட்டேன்.

சமூக வலைதளம்

சமூக வலைதளம்

என் மகனின் புகைப்படங்கள், வீடியோக்களை பார்த்து மக்கள் மகிழ்ச்சி அடைவது நல்லது. ஆனால் ஒரு குழந்தையின் மீது இவ்வளவு ஆர்வம் தேவையா?. அது தான் எனக்கு புரியவில்லை. எனக்கு சமூக வலைதளம் பிடிக்காது. எனக்கு நிஜ உலகம் தான் பிடிக்கும் என்று சயிஃப் அலி கான்தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X