சமந்தாவை திருமணம் செய்யும் திட்டம் எதுவுமில்லை… சித்தார்த்

By Mayura Akilan

No plans to wed Samantha, says Siddharth
சென்னை: நடிகை சமந்தாவை தாம் திருமணம் செய்து கொண்டதாக வெளியான தகவல்களுக்கு நடிகர் சித்தார்த் மறுப்பு தெரிவித்துள்ளார். சமந்தாவை திருமணம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழில் பாய்ஸ் படத்தில் அறிமுகமான சித்தார்த் பற்றி பல கிசுகிசுக்கள் உலா வந்துள்ளன. இப்போதைய கிசுகிசு நடிகை சமந்தாவுடன் சித்தார்த்துக்கு திருமணம் முடிந்து விட்டது என்பதுதான். ‌

கடந்த சனிக்கிழமையன்று சித்தார்த் மற்றும் சமந்தா ஆகிய இருவரும், அவர்களின் குடும்பமும் காளஹஸ்தி கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து, புதிதாக திருமணமானவர்கள் நடத்தும் ராகு - கேது பூஜைகளையும் அவர்கள் நடத்தியதால் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது. மேலும், பூஜை நேரத்தில் சித்தார்த்தின் தந்தை மயங்கி விழுந்ததாகவும் கூறப்பட்டது.

இது குறித்து பேசிய அவர் , தனக்கும் சமந்தாவுக்கும் இடையே திருமணம் நடந்ததாக கூறுவது பொறுப்பற்றதனம் என்றும்‌, அது நேர்மையான செய்தி இல்லை என்றும் மறுப்புத் தெரித்துள்ளார். மேலும், தன்னுடைய திருமணம் முறைப்படி நடக்கும் எனவும் சித்தார்த்‌ உறுதியாக கூறி திருமண வதந்திக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார் சித்தார்த்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X