அஜித்தின் படத்துக்கு தயாரிப்பாளர் கிடைக்கலையா?.. உண்மையில் என்னதான் நடக்குது?.. பிரபலம் ஓபன்

சென்னை: அஜித்குமார் நடிப்பில் கடந்த வருடத்தில் வெளியான இரண்டு படங்களுமே சுமார் வரவேற்பை பெற்றன. ஆனால் இரண்டு படங்களுமே தோல்வியடைந்து நஷ்டம் ஏற்பட்டதால்; அவரது அடுத்த படத்தை தயாரிப்பதற்கு யாரும் முன்வரவில்லை என்றும் சமீபமாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஓபனாக பேசியிருக்கிறார்.

அஜித் ஒரு வருடத்துக்கு ஒரு படம் மட்டுமே நடிக்கக்கூடியவர். ஆனால் கடந்த வருடத்தில் மட்டும் இரண்டு படங்களில் நடித்தார். கார் ரேஸில் கலந்துகொண்டதால்; அதற்குள் தனக்கு இருக்கும் கமிட்மென்ட்டுகளை முடிப்பதற்காகத்தான் அவர் அப்படி செய்தார். முதலில் நடித்த விடாமுயற்சி படம் படுதோல்வியை சந்திக்க; அடுத்ததாக நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் அஜித் ரசிகர்களை மட்டும்தான் திருப்திப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த படமும் ஆதிக்குடன்: குட் பேட் அக்லி படத்தில் பணியாற்றியபோது ஆதிக் ரவிச்சந்திரனின் வொர்க்கிங் ஸ்டைல் பிடித்துவிட்டதால்; அவரை அஜித் தனது குட் புக்கில் சேர்த்துவிட்டாராம். எனவே சிவா, ஹெச்.வினோத்துடன் எப்படி வரிசையாக படங்களில் பணியாற்றினாரோ அதேபோல் இவருடனும் பணியாற்ற முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. அதன் காரணமாகத்தான் அடுத்த படத்தையும் அவருக்கே கொடுத்திருக்கிறார்.

No Producer for Ajith s Next Film Producer Dhananjayan Clears the Rumours
Photo Credit:

தயாரிப்பாளர்கள் கிடைக்கவில்லையா?: ஆதிக் சொன்ன கதைக்கு அஜித் ஓகே சொல்லிவிட்டாலும்; அவரை வைத்து படம் தயாரிக்க யாரும் முன்வரவில்லை என்று சமீப நாட்களாக தகவல்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. முக்கியமாக குட் பேட் அக்லி திரைப்படத்தால் மொத்தம் 40 கோடி ரூபாய் நஷ்டம் என்று தயாரிப்பாளர் கேயாரும் ஒரு பேட்டியில் கூறினார். அதுமட்டுமின்றி அஜித் சம்பளமாக 180 கோடி கேட்கிறார் என்றும்; அதனாலும் தயாரிக்க யோசிக்கிறார்கள் எனவும் ஒரு பேச்சு ஓடுகிறது.

உண்மை என்ன?: ஆனால் அஜித் மீது வேண்டுமென்றே அவதூறு பரப்புவதற்காகத்தான் இதுபோன்றெல்லாம் கிளப்பிவிடுகிறார்கள். விஜய் சினிமாவை விட்டு ஒதுங்கியிருக்கும் சூழலில் அடுத்ததாக அஜித்துக்குத்தான் மார்க்கெட் அதிகம் இருக்கிறது. இதெல்லாம் தெரியாமல் வாய்க்கு வந்ததை ஒருதரப்பினர் உளறுகிறார்கள் என்பது ஏகே ரசிகர்களின் கருத்து. இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கிறார்.

தனஞ்ஜெயன் பேட்டி: அவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "அஜித்தின் அடுத்த படத்துக்கு தயாரிப்பாளர் கிடைக்கவில்லை என்று சொல்கிறார்கள். அதெல்லாம் இல்லை. படம் தொடர்பான இறுதிக்கட்ட விவாதங்கள் போய்க்கொண்டிருக்கின்றன. விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும். கண்டிப்பாக பிப்ரவரி இறுதியிலோ அல்லது மார்ச்சிலோ ஷூட்டிங் சென்றுவிடுவார்கள். இந்த வருட கடைசியில் அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் அந்தப் படம் ரிலீஸாகும்" என்றார்.

More from Filmibeat

Read more about: ajith ak அஜித் ஏகே
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X