டிராகன் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவுடன் சண்டையா?.. சிம்பு வேலையை காண்பித்தாரா?.. தயாரிப்பாளர் ஓபன்
சென்னை: சிம்பு இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடித்துவருகிறார். அதன் இறுதிக்கட்ட ஷூட்டிங் நடந்துவருவதாக தெரிகிறது. இதற்கிடையே டிராகன் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்ததாக தொடங்கும் என எதிர்பார்க்கிறது. இந்நிலையில் சிம்புவுக்கும், அஸ்வத்துக்கும் இடையே மோதல் என்ற தகவலும் வந்தது.
சிம்பு இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்து முழு முனைப்போடு நடித்துவருகிறார். அவர் நடித்த மாநாடு,வெந்து தணிந்தது காடு, பத்து தல, தக் லைஃப் ஆகிய மூன்று படங்களில் மாநாடும், வெந்து தணிந்தது காடும்தான் ஹிட்டாகின. இருந்தாலும் வரிசையாக படங்களில் கமிட்டாகிவருகிறார். அந்தவகையில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில்,அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க கமிட்டானார்.

அரசன் சிம்பு: முதலில் வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த கூட்டணி இது என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை படம் பெற்றிருக்கிறது.எப்போதும் உள்ள ராசியாக இந்தப் படத்தின் ஷூட்டிங்போதும் சிம்புவுக்கும், வேறு தயாரிப்பாளருக்கும் பிரச்னை வர; பஞ்சாயத்து வரை சென்று நின்றுபோன படப்பிடிப்பு தொடங்கியது. அதேசமயம் சிம்புவால் எந்த தாமதமும் ஷூட்டிங்கில் இல்லை என அதன் தயாரிப்பாளர் தாணுவும் சர்ட்டிஃபிக்கேட் கொடுத்திருக்கிறார்.
அஸ்வத் மாரிமுத்துவுடன் எப்போது?: வெற்றிமாறன் படத்துக்கு இருக்கும் எதிர்பார்ப்பு அளவு அஸ்வத் மாரிமுத்துவுடன் எஸ்டிஆர் சேர்ந்திருக்கும் படத்துக்கும் இருக்கிறது. ஏற்கனவே அஸ்வத் இயக்கிய ஓ மை கடவுளே, டிராகன் ஆகிய இரண்டு படங்களும் மெகா ஹிட்டாகின. அதிலும் டிராகன் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து மொத்தம் நூறு கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்தது.
வெளியான பரபர தகவல்: முதலில் அஸ்வத் படத்தில்தான் நடிப்பதாக இருந்தார். ஆனால் வெற்றியுடன் சேர்வதால் இந்தப் படத்தை தள்ளி வைத்திருக்கிறார். அதுமட்டுமின்றி அந்தப் படத்துக்காக வைத்திருந்த கெட்டப்தான் அரசன் படத்துக்கும். சூழல் இப்படி இருக்க அஸ்வத்துக்கும், சிம்புவுக்கும் இடையே மனஸ்தாபம் வந்துவிட்டது. அதன் காரணமாக இந்தப் படம் நடப்பது சந்தேகம்தான் என்றெல்லாம் தகவல்கள் பரவின.
மறுத்த அர்ச்சனா: இந்நிலையில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இதுகுறித்து பேசுகையில், "அவர்கள் இரண்டு பேருக்கும் மோதல் என்பது உண்மை இல்லை. சிம்பு இப்போது அரசன் படத்தில் பிஸியாக இருக்கிறார். அஸ்வத் இன்னும் திரைக்கதையை இறுதி செய்யவில்லை. அஸ்வத் எழுதும் விஷயத்தில் தெளிவாக இருப்பார். அவர் எழுதியை அப்படியே திரையில் கொண்டு வருவார். அதேபோல்தான் பிரதீப்பும். அவரும் தான் எழுதியதை மாற்றமில்லாமல் படமாக்கினார்.
கற்றுக்கொள்கிறேன்: அதேபோல் அந்த மாதிரியான இயக்குநர் நிறைய புத்தகங்களை படிக்க ஊக்குவிக்கிறார்கள். அட்லீயிடமிருந்தும் நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். அதேபோல்தான் இவர்களிடமும் கற்றுக்கொண்டிருக்கிறேன்" என்றார்.


Click it and Unblock the Notifications
