தளபதி 63: எல்லாமே பொய்யாம் கோப்ப்பால், பொய்யாம்
சென்னை: தளபதி 63 படத்தின் முக்கிய வில்லன் குறித்து வெளியான தகவலில் உண்மை இல்லையாம்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் தளபதி 63. படப்பிடிப்பு துவங்கியதில் இருந்தே ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் அட்லி அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் படத்தை இயக்கி வருகிறார்.
கதை திருட்டு புகார் வழக்கு வேறு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
ஷாருக்கான்
தளபதி 63 படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தான் முக்கிய வில்லன். கடைசி 15 நிமிடங்கள் வந்தாலும் விஜய்யுடன் மோதி கதையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்துவார் என்று கூறப்பட்டது. அதை நம்பி விஜய் ரசிகர்கள் போஸ்டர்கள் எல்லாம் தயார் செய்தனர்.

தளபதி 63
தளபதி 63 படத்தில் ஷாருக்கான் நடிக்கவில்லை என்பது தான் உண்மை. முன்னதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை என்பது தெரிய வந்துள்ளது. அதே சமயம் அட்லி, ஷாருக்கான் சந்திப்பின் பின்னால் முக்கிய காரணம் உள்ளதாம்.

ரீமேக்
அட்லி ஷாருக்கானை வைத்து மெர்சல் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய விரும்புகிறாராம். மேலும் புதிதாக ஒரு கதையையும் கூறியுள்ளாராம். ஷாருக்கானுக்கு ரீமேக்கை விட அந்த புதிய கதை தான் மிகவும் பிடித்துள்ளது என்று கூறப்படுகிறது.

மார்க்கெட்
ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் ஷாருக்கான். அவரின் நிலை சரியில்லாத நேரத்தில் அட்லி இயக்கத்தில் நடிக்க ஆர்வம் காட்டியுள்ளார். கதையை தேர்வு செய்வதில் முன்பை விட தற்போது அதிக கவனம் செலுத்துகிறார் ஷாருக்கான். காரணம் நிலைமை அப்படி மோசமாக உள்ளது.


Click it and Unblock the Notifications











