எந்திரன் -2ல் ரஜினி வில்லனாக நடிக்கிறேனா... அமீர்கான் விளக்கம்
மும்பை: ரஜினியின் எந்திரன் -2ல் வில்லனாக நடிப்பதாக வெளியான தகவலை அமீர்கான் தரப்பு மறுத்துள்ளது.
விக்ரம் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் ஐ படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில், அடுத்ததாக ஷங்கர் எந்திரன் -2வை இயக்க உள்ளதாக தகவல் வெளியானது.
மேலும், இப்படத்தில் மீண்டும் ரஜினியே நாயகனாக நடிப்பதாகவும், வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் அமீர்கான் நடிப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், ஊடகங்களில் வெளியான இத்தகவலை அமீர்கான் தரப்பு மறுத்துள்ளது.
இது தொடர்பாக அமீர்கானின் மேனேஜர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

பி.கே. பட வேலைகள்...
அமீர்கான் தற்போது "3 இடியட்ஸ்" படக்குழுவினர்களின் அடுத்த படமான பி.கே (P.K )என்ற படத்தின் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார்.

சத்யமேவ ஜெயதே...
அதனைத் தொடர்ந்து அவருக்கு 'சத்யமேவ ஜெயதே' தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு வேலைகள் உள்ளன.

கண்டனம்...
மேலும், அவர் எந்திரன் 2 படத்தில் நடிப்பதற்காக எந்த ஒரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை. முழுக்க முழுக்க ஆதாரமின்றி வெளியாகியிருக்கும் இந்த செய்திக்கு அமீர்கான் தரப்பிலிருந்து கண்டனம் தெரிவிக்கப் பட்டுள்ளது.

வில்லனாக நடிக்க மாட்டார்...
அமீர்கான், ரஜினிகாந்த் உள்பட எந்தவொரு நடிகரின் படத்திற்கும் வில்லனாக நடிக்க விரும்பாதவர். இதுவரை அவர் நெகட்டிவ் ஹீரோவாகத்தான் நடித்துள்ளாரே தவிர வில்லனாக இதுவரை நடித்ததில்லை இனி எதிர்காலத்திலும் அப்படியொரு திட்டமும் இல்லை' என அவர் இவ்வாறு உறுதிபடத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











