திருமணம் வேண்டாம்… தனிமையே போதும்: சல்மான்கான் திடீர் முடிவு
மும்பை: திருமணம் செய்துகொள்வதில் விருப்பம் கிடையாது. தனிமையைதான் நான் விரும்புகிறேன் என்று நடிகர் சல்மான் கான் கூறியுள்ளார்.
இந்தி திரைப்பட நடிகர் சல்மான் கானிற்கு 48 வயதாகிறது. ஐஸ்வர்யா ராய் முதல் கத்ரீனாகைப் வரை பல்வேறு நடிகைகளுடன் இணைத்து பேசப்பட்டவர் சல்மான் கான். இது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை.
திருமணம் பற்றி பலமுறை பல்வேறு விதமாக பதில் கூறியுள்ளார். குழந்தைகள் என்றால் அலாதிப் பிரியம் என்றும் ஒருமுறை சல்மான்கான் கூறியுள்ளார்.

பெண்தோழிகள் வேண்டாம்
சமீபத்தில் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த சல்மான் ''எனக்கு திருமணத்திலோ அல்லது பெண் தோழிகளை வைத்து கொள்வதிலோ விருப்பம் கிடையாது என்று அறிவித்துள்ளார்.

தனிமையிலே இனிமை
நான் தனிமையில் வாழவே விரும்புகிறேன். கடந்த 30 ஆண்டாக தனிமையில் பழகிவிட்டேன். தனிமையை தான் விரும்புகிறேன்.

தொந்தரவு இல்லை
தனிமையாக வசிப்பதால், செய்ய வேண்டியவற்றை யாருடைய குறுக்கீடும் இல்லாமல் செய்ய முடியும். அதை பற்றி விவரித்து கூற வேண்டியதில்லை.

பெண்களை மதிக்கிறேன்
நான் யாரிடமும் பொய் பேச வேண்டிய அவசியமும் இல்லை. யாராவது என் வாழ்வில் குறுக்கிட விரும்பினால் தாராளமாக வரலாம். ஆனால் எதையும் எதிர்பார்க்காதீர்கள். நான் பெண்களை மதிப்பவன். அவர்கள் மீதான மதிப்பை இனியும் தொடருவேன்" என்று கூறினார்.


Click it and Unblock the Notifications











