படத்துல மட்டுமில்ல.. நிஜத்திலும் நான் அப்படித்தான்.. தன் கேரக்டர் பற்றி சொன்ன அருள்நிதி!
சென்னை : வம்சம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் அருள்நிதி..
உதயன் மௌனகுரு தகராறு டிமான்டி காலனி ஆறாது சினம் என்று பல படங்களில் நடித்துள்ளார்.
படத்தில் மட்டும் இல்ல, நிஜத்திலும் நான் இப்படித்தான் இருப்பேன் என்று தனது கேரக்டர் குறித்து நடிகர் அருள்நிதி கூறியது தற்போது அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.

வம்சம் தொடக்கம்
இயக்குநர் பாண்டிராஜ் எழுதி, இயக்கிய வம்சம் திரைப்படத்தில் அருள்நிதி மற்றும் சுனைனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அருள்நிதிக்கு திருப்புமுனையாக அமைந்த படம் தான் மௌனகுரு. ஆக்ஷன் திரில்லர் படமாக அமைந்திருந்த மௌனகுரு படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடிகை இனியா நடித்திருந்தார். விமர்சன ரீதியாக இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

பல படங்கள்
தகராறு, டிமான்டி காலனி, ஆறாது சினம், பிருந்தாவனம், இரவுக்கு ஆயிரம் கண்கள், களத்தில் சந்திப்போம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார் அருள்நிதி. தற்போது டைரி, தேஜாவு, டி ப்ளாக், போன்ற படங்கள் வரிசையாக வெளிவர தயாராக உள்ளது. கோவிட் காரணமாக வெளிவராமல் இருந்த இந்த படங்கள் தற்போது வரிசையாக வெளிவர தயாராக உள்ளது.

அமைதியான சுபாவம்
தொடர்ந்து தன் படங்கள் வெளிவருவது தனக்கு சந்தோஷமாக இருப்பதாக அருள்நிதி கூறியுள்ளார். இந்நிலையில் தன் நிஜ கேரக்டர் பற்றி கூறியிருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அருள் நிதி கூறியிருப்பதாவது," நான் படங்களில் மிகவும் சைலண்டாக இருப்பது போலவே நிஜத்திலும் நான் சைலன்ட்டாக தான் இருப்பேன் என்று கூறியுள்ளார். படங்களில் நடிப்பதும், அதன்பின் ப்ரோமோஷனில் ஈடுபடுவதும், தானுண்டு தன் வேலையுண்டு என்று தான் எப்போதும் இருப்பேன் என்று கூறியுள்ளார்.
Recommended Video

பிரைவேட் பர்சன்
நான் ரொம்ப பிரைவேட் ஆன பர்சன். தேவைப்பட்டால் மட்டுமே சோசியல் மீடியாக்களில் வருவேன், மிகவும் ஆக்ட்டிவாக இருப்பதில்லை, மற்ற நேரங்களில் சோசியல் மீடியாவை நான் அதிகமாக பயன்படுத்துவதில்லை என்று கூறியுள்ளார் அருள்நிதி. நடிகர் அருள்நிதி நடித்த டி பிளாக் திரைப்படம் ஜூலை 1ஆம் தேதி வெளிவர உள்ளது. இவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் அவந்திகா மிஸ்ரா . இவர் ஏற்கனவே என்ன சொல்லப் போகிறாய் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தேஜாவு திரைப்படமும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது. இந்த படம் கிரைம் திரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அருள்நிதி ஐபிஎஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











