விஜய்யை மட்டுமில்லை.. ரஜினிகாந்தையும் கலாய்த்த நட்டி நட்ராஜ்.. TN2026 படத்துக்கு குவியும் எதிர்ப்பு!
சென்னை: போக்கிரி படத்தை பேக்கிரி என கலாய்த்த நிலையில் தான் விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்ச்சியே நிறுத்தப்பட்டது என அப்போது பரபரப்பாக தகவல்கள் வெளியாகின. தமிழ் சினிமா படங்களை தமிழ்ப்படத்துக்கு முன்பாகவே சந்தானம், ஜீவா உள்ளிட்டோர் விஜய் டிவியில் பயங்கரமாக ஸ்பூஃப் செய்து ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தனர்.
சி.எஸ். அமுதன் தமிழ்ப்படம் 1 மற்றும் 2 படங்களிலும் அந்த வேலையை சிறப்பாக செய்து பல சம்பவங்களை செய்தார். சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்த் காலை தூக்கும் காட்சியில் பேன்ட் கிழிவது, தேவர்மகன் கிளைமேக்ஸ், சாமி டிபன் பாக்ஸ் சண்டை என பல பெரிய படங்களின் மெகா சீன்கள் மொக்கைப்படுத்தப்பட்டன.

ஆனால், அதற்கு எல்லாம் கடுமையான எதிர்ப்பு கிளம்பவே அந்த ட்ரோல்கள் அடங்கின. இந்நிலையில், விஜய்யின் அரசியல் வாழ்க்கையை கலாய்க்கும் விதமாக தம்பி ராமையா மகன் உமாபதி ராமையா இயக்கி நட்டி நட்ராஜ் நடித்துள்ள TN2026 தங்க நட்சத்திரம் படத்துக்கு விஜய் ரசிகர்களை தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்.
விஜய்க்கு ஆதரவா? அசிங்கமா?: விஜய்யின் நண்பரான நட்டி நட்ராஜ் ஏற்கனவே எச். வினோத் இயக்கத்தில் வெளியான சதுரங்க வேட்டை படத்திலேயே "என்னது இளைய தளபதி விஜய் தாக்கப்பட்டாரா" என பாம்புக்கு விஜய் பெயரை வைத்து வம்பிழுத்திருப்பார். விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் படத்தையே எச். வினோத் இயக்கும் வாய்ப்பை எந்தவொரு காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல் விஜய் கொடுத்தார். இந்நிலையில், TN2026 என ரெடிமேட் சப்பாத்தி போல அதிரடியாக ஒரு படம் உருவாகி வரும் ஏப்ரல் 10ம் தேதி வெளியாக போகிறது.
இந்த படம் விஜய்க்கு எதிரான படம் என ஆதவ் அர்ஜுனா பொங்கிய நிலையில், விஜய் சிங்கம் அவரை டேமேஜ் பண்ணவில்ல என நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் இயக்குநர், தம்பி ராமையா உள்ளிட்டோர் விளக்கம் அளித்துள்ளனர். டிரைலரின் இறுதியில் ஓம் சக்தி பராசக்தி.. என எம்.எஸ். பாஸ்கர் வசனம் பேசியுள்ள நிலையில், விஜய்க்கு ஆதரவு என்றால் அப்போ திமுகவுக்கு எதிரான படமா? என்கிற கேள்வியும் கிளம்பி உள்ளது. மேலும், தேர்தல் நேரத்தில் எப்படி இந்த படத்தை ரிலீஸ் செய்ய அனுமதி கொடுத்தனர் என்றும் விஜய் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நடிகையுடன் தொடர்பு?: இதுமட்டுமின்றி டீசர், டிரைலரிலேயே ஃபாரீனில் நடிகையுடன் நீச்சல் குளத்தில் இருப்பது போன்ற காட்சிகள் எல்லாம் இடம்பெற்றுள்ள நிலையில், ஏகப்பட்ட சர்ச்சைகள் இந்த படம் வெளியானால் தமிழ் சினிமாவில் வெடிக்கும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது என சினிமா வட்டாரத்தில் பேசிக் கொள்கின்றனர்.
ரஜினிகாந்த் ரசிகர்கள் எதிர்ப்பு: படத்தில் ஹீரோவின் பெயரே கோல்டன் ஸ்டார் குல்காந்த் குமார் என வைக்கப்பட்டுள்ளது என்றும் ரஜினிகாந்தின் மனிதன் படத்தின் கட் அவுட் தான் வைக்கப்பட்டுள்ளது. நட்டி விஜய்யை அசிங்கப்படுத்தவில்லை. வழக்கம் போல நம்ம தலைவர் ரஜினியைத்தான் அசிங்கப்படுத்துகிறார் என எதிர்க்கத் தொடங்கியுள்ளனர். அடுத்த வாரம் திட்டமிட்டபடி TN2026 தங்கநட்சத்திரம் திரைப்படம் வெளியாகுமா? என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











