கிட்டாரும் கையுமாக.. உன்னாலே உன்னாலே பாட்டு.. லாக் டவுனில் துருவ் என்ன செய்றாருன்னு பாருங்க!
சென்னை: நடிகர் துருவ் விக்ரம் கிட்டார் வாசித்தபடியே பாட்டு பாடும் வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி உள்ளார்.
Recommended Video
சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஆதித்யா வர்மா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.
தனது தந்தையை போலவே பன்முகத் திறமை கொண்டவர் என்பதை அவ்வப்போது துருவ் விக்ரம் நிரூபித்து வருகிறார்.

டப்ஸ்மாஷ்
சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்பாக, நடிகர் துருவ் விக்ரம் வெளியிட்ட டப்ஸ்மாஷ் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த டப்ஸ்மாஷுக்கு கிடைத்த வரவேற்பு கோலிவுட்டில் துருவ் விக்ரம் நுழைய ஒரு சின்ன டிக்கெட்டாக அமைந்தது. தனது நடிப்புத் திறமையை அந்த வீடியோவில் வெளிப்படுத்தி அசத்தியிருப்பார் துருவ் விக்ரம்.

முதல் படத்திலேயே
விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் துருவ் விக்ரம். பாலா இயக்கத்தில் வர்மா எனும் தலைப்பில் உருவான படத்தின் மேக்கிங் சரியில்லை என்ற பிரச்சனை கிளம்ப, கிரிசாயா இயக்கத்தில் ஆதித்ய வர்மா படம் வெளியானது. முதல் படத்திலேயே தனது நடிப்பு ஆற்றலை வெளிப்படுத்தி அசத்தி இருப்பார் துருவ்.

கிட்டாருடன்
ஆதித்ய வர்மா படத்திற்கு பிறகு நடிகர் துருவ் விக்ரம் அடுத்ததாக மாரி செல்வராஜ் படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், இந்த லாக் டவுன் நேரத்தில் தனது இசைத் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார் துருவ் விக்ரம்.

சிறு சிறு உறவுகள்
கடந்த 2007ம் ஆண்டு வெளியான உன்னாலே உன்னாலே படத்தில் இடம்பெற்று இருந்த சிறு சிறு உறவுகள் பாடலை பாடியும், கிட்டாரில் இசையமைத்தும் தனது புதுத் திறமையை நடிகர் துருவ் விக்ரம் வெளிப்படுத்தியதை தமிழ் சினிமா ரசிகர்கள் வெகுவாக ரசித்து வைரலாக்கி வருகின்றனர்.

அப்பாவை போலவே
டப்பிங் ஆர்ட்டிஸ்ட், நடிகர், பாடகர் என பன்முகத் திறமைகளை கொண்டவர் நடிகர் சியான் விக்ரம். அப்பாவை போலவே மகன் துருவ் விக்ரமும், பாட்டு பாடுவது, இசைக் கருவிகளை வாசிப்பது என தனது பன்முகத் திறமைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிப்படுத்தி வருகிறார்.

இவருக்காகத் தான்
சமீபத்தில் சியான் விக்ரம் சினிமாவை விட்டு விலகப் போவதாக வந்த வதந்தியும் துருவ் விக்ரமை மையப்படுத்தித் தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. துருவ் விக்ரமின் சினிமா எதிர்காலத்துக்காகத் தான் நடிகர் விக்ரம் அந்த முடிவை எடுத்துள்ளார் என்ற வதந்தி வைரலான நிலையில், சியான் விக்ரம் தரப்பு அதனை மறுத்திருந்தது. மேலும், விக்ரம் ரசிகர்கள், அந்த வதந்திக்கு எதிராக ட்விட்டரில் கொதித்து எழுந்ததும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











