ஒரு விரல் புரட்சி வெடிக்குமா?.. விஜய்க்கு ஓட்டுப்போட ஓவர்சீஸில் இருந்து கிளம்பும் ரசிகர்கள்!
சென்னை: சர்க்கார் படத்தில் வெளிநாட்டில் வேலை செய்தாலும் ஓட்டுப்போடுவதற்காக இந்தியாவுக்கு வரும் விஜய் தனது ஓட்டு மிஸ் ஆனதால் அதனை தேடும் வகையில் ஒரு விரல் புரட்சியையே நடத்துவார். இந்நிலையில், தவெக முதல் முறையாக தேர்தல் களத்தில் களமிறங்கியுள்ள நிலையில், விஜய்க்கு ஓட்டுப்போட வெளிநாடுகளில் இருந்து NRIக்கள் இந்தியாவுக்கு வருவதாக சமூக வலைதளத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.
வருபவர்க விஜய்யின் விசில் சின்னத்துக்கு ஓட்டுப்போட வருகிறார்களா? அல்லது போர் பதற்றம் காரணமாக சொந்த பந்தங்களை பார்க்க நாடு திரும்புகின்றனரா? என்கிற கேள்விகளும் கிளம்பி உள்ளன.

ஓவர்சீஸில் விஜய் படங்களுக்கு பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூல் வேட்டை வரக் காரணமாக உள்ள NRIக்கள் நாடு திரும்பி ஓட்டுப்போட்டால் அது தவெகவுக்கு பெரிய பலமாக இருக்கும் என விஜய் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வெளியே வருவாரா விஜய்?: தேர்தலுக்கு இன்னும் சுமார் ஒரு மாத காலமே உள்ள நிலையில், விஜய் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று மக்களை சந்திக்கும் தனது பிரச்சார பயணங்களை நிறைவு செய்வாரா? மும்பைக்கு அட்லி மனைவியின் வளைகாப்புக்கு போய்விட்டு வந்த பிறகும் இன்னமும் விஜய் அமைதியாகவே இருப்பது ஏன் என்றும் பெரிதாக எந்தவொரு கட்சிகளுடன் கூட்டணி வைக்காத நிலையில், மக்களுடன் கூட்டணி வைத்திருப்பதாக சொன்னாலும், அந்த மக்களை சந்திக்க இன்னமும் வெளியே வரவில்லை என்கிற விமர்சனங்கள் கிளம்பி உள்ளன.
பாதுகாப்பு முக்கியம்: அப்படியே விஜய் மக்களை சந்திக்க வெளியே வந்தாலும், அவருக்கும் மக்களுக்கும் உரிய பாதுகாப்பை காவல் துறை அமைத்து தர வேண்டும் என்றும் விஜய் மக்களை சந்திக்க வரும் போது மேலும், கூட்ட நெரிசல், வாகனத்தை பின் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் பலியாவது உள்ளிட்ட சங்கடங்கள் ஏற்படக் கூடாது என்றும் கூறி வருகின்றனர்.
ஓவர்சீஸில் இருந்து NRIக்கள்: அடுத்த மாதம் ஏப்ரல் 23ம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், விஜய்க்கு ஓட்டுப்போடுவதற்காக வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் அவரது ரசிகர்கள் அதிகளவு நாடு திரும்ப திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. வருபவர்கள் எல்லாம் விஜய்க்காக ஓட்டுப்போடப் போகிறார்களா? அல்லது விஜய்க்கு எதிராக ஓட்டுப்போட போகிறார்களா? என்பது தேர்தல் முடிவு தினமான மே 4ம் தேதி தெரிந்துவிடும். மாற்றத்தை விரும்பி இளைஞர்கள் எல்லாம் ஒரு விரல் புரட்சி நடத்தினால் தான் அதற்கு வாய்ப்பு என்றும் சர்க்கார் படமெல்லாம் நிஜத்தில் நடக்கவே வாய்ப்பே இல்லை என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











