அடுத்த படத்துக்கு தனுஷ் ரெடி... ஜோடி சேருகிறார் அமலா பால்.. 'மீஜிக்' அதே அனிருத்!

லண்டன்: லண்டனில் தனது 30 வது பிறந்த நாளைக் கொண்டாடிய தனுஷ் தனது புதிய தமிழ்ப்பட அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

கடந்த சனிக்கிழமை தனுஷின் 30வது பிறந்தநாள். சில முக்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் லண்டனில் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார் தனுஷ்.

பொதுவாக பிறந்த நாளன்று நடிகர்களை அவர்களது ரசிகர்கள் சந்திக்க ஆசைப்படுவார்கள். இவ்வாண்டு லண்டனில் பிறந்த நாள் கொண்டாடியதால், தனது ரசிகர்களுக்கு பிறந்தநாள் விருந்தாக தனது புதுப்பட அறிவிப்பை அளித்து மகிழ்ச்சி விருந்து அளித்துள்ளார் தனுஷ்.

தனுஷின் அடுத்தப்படம்...

தனுஷின் அடுத்தப்படம்...

ஹிந்தியில் ராஞ்சனா 100 கோடிகளைத் தாண்டி வசூல் சாதனி புரிந்து வருகிரது. தமிழிலும் தனுஷ் நடிப்பில் வெளியான மரியான் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்நிலையில், தனுஷ்-ன் அடுத்த படம் குறித்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

ஹிந்தியில் பொறுமை...

ஹிந்தியில் பொறுமை...

ஹிந்தியில் தனுஷிற்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்து கதவைத் தட்ட, ராஞ்ச்னா போன்று நல்ல காதல் கதையம்சம் கொண்ட படத்திற்காக காத்திருப்பதாக தனுஷ் அறிவித்தார்.

பேஸ்புக்கில் அறிவிப்பு...

பேஸ்புக்கில் அறிவிப்பு...

தற்போது, லண்டனில் இருந்த படியே, பேஸ்புக் மூலம் தனது அடுத்த தமிழ்ப்பட அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் தனுஷ்.

அறிமுக இயக்குநர்...

அறிமுக இயக்குநர்...

பெயர் முடிவு செய்யப்படாத் அப்படத்தில் தனுஷ் ஜோடியாகிறார் அமலாபால். பொல்லாதவன், ஆடுகளம், 3 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் முதல் முறையாக இந்தப் படத்தின் இயக்குநராக அறிமுகமாகிறார்.

அனிருத் இசை...

அனிருத் இசை...

உன்டர்பார் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு இசை ‘கொலைவெறி' அனிருத்.

விரைவில் அறிவிப்பு...

விரைவில் அறிவிப்பு...

விரைவில் படத்தின் தலைப்பு பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தனுஷ் தெரிவித்துள்ளார்.

அமலாபால் மகிழ்ச்சி...

அமலாபால் மகிழ்ச்சி...

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமலாபால், ‘ தனுஷுடன் ஜோடி சேர்வது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக' கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X