நடிகர் கார்த்தி வெளியிட்ட ஓ மணப்பெண்ணே படத்தின் ட்ரெயிலர்... மிகச்சிறப்பு!

சென்னை : நடிகர் ஹரீஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஓ மணப்பெண்ணே.

காதலை மையமாக கொண்டு இந்தப் படம் இம்மாதம் 22ம் தேதி தேதி ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் ட்ரெய்லர் ரிலீசாக உள்ளது.

பெல்லி சூப்புலு ரீமேக்

பெல்லி சூப்புலு ரீமேக்

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா -ரீத்து வர்மா நடிப்பில் கடந்த 2016ல் வெளியான படம் பெல்லி சூப்புலு. தருண் பாஸ்கர் இயக்கிய இந்தப் படம் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றது. இந்தி மற்றும் மலையாளத்திலும் இந்தப் படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

ஓ மணப்பெண்ணே படம்

ஓ மணப்பெண்ணே படம்

இந்தப் படம் தற்போது தமிழில் ஓ மணப்பெண்ணே என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. படத்தில் ஹரீஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் ஜோடி சேர்ந்துள்ளனர். ஏஎல் விஜய்யிடம் இணை இயக்குநராக பணியாற்றிய கார்த்திக் சுந்தர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

சென்னையில் மொத்த படப்பிடிப்பு

சென்னையில் மொத்த படப்பிடிப்பு

சென்னையிலேயே படத்தின் மொத்த படப்பிடிப்பும் நடந்து முடிந்துள்ளது. இந்தப் படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளது. வரும் 22ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியில் படம் ரிலீசாக உள்ளது. விரைவில் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

இந்நிலையில் இன்று மாலை படத்தின் ட்ரெயிலர் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ட்ரெய்லரை நடிகர் கார்த்தி ட்விட்டரில் மாலை 5 மணிக்கு வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹரீஷ் கல்யாணுக் தமிழில் அதிகமான ரசிகர்கள் உள்ள நிலையில் இந்தப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தொடர் ஹிட் கொடுக்கும் ஹரீஷ்

தொடர் ஹிட் கொடுக்கும் ஹரீஷ்

பியார் பிரேமா காதல், தாராள பிரபு என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்துள்ளார் ஹரீஷ் கல்யாண். இவருக்கு இளம் ரசிகைகள் அதிகமாக காணப்படுகின்றனர். சிறப்பான காதல் கதைகளை இவர் தொடர்ந்து கொடுத்து வருகிறார். தாராளப் பிரபு படத்தில் விவேக்குடன் இணைந்து வித்தியாசமான கதையில் நடித்துள்ளார். இந்நிலையில் ஓ மணப்பெண்ணே இவருக்கு சிறப்பாக கைகொடுக்கும் என்று நம்பலாம்.

தொடர் வெற்றிகள்

தொடர் வெற்றிகள்

சிறப்பான காதல் கதைகளை இவர் தொடர்ந்து கொடுத்து வருகிறார். தாராளப் பிரபு படத்தில் விவேக்குடன் இணைந்து வித்தியாசமான கதையில் நடித்துள்ளார். இந்நிலையில் ஓ மணப்பெண்ணே இவருக்கு சிறப்பாக கைகொடுக்கும் என்று நம்பலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X