»   »  நிர்வாணமாக நடிச்சிருக்கேன், தியேட்டரில் பார்க்கத் துடிக்கிறேன்: இப்படியும் ஒரு ஹீரோ

நிர்வாணமாக நடிச்சிருக்கேன், தியேட்டரில் பார்க்கத் துடிக்கிறேன்: இப்படியும் ஒரு ஹீரோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பேஃபிக்ரே படத்தில் நடிகர் ரன்வீர் சிங் நிர்வாணமாக நடித்துள்ளாராம்.

பாலிவுட்டின் முன்னணி மற்றும் துடிப்பான ஹீரோ ரன்வீர் சிங். நடிகை தீபிகா படுகோனேவின் காதலரே தான். யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில், ஆதித்யா சோப்ரா இயக்கத்தில் ரன்வீர் சிங், வாணி கபூர் நடித்து வரும் படம் பேஃபிக்ரே.

படத்தில் ரன்வீருக்கும், வாணிக்கும் இடையே ஏகப்பட்ட லிப் லாக்குகள்.

முத்தம்

முத்தம்

பேஃபிக்ரே படத்தில் ரன்வீரும், வாணியும் எதற்கெடுத்தாலும் பொசுக்கு பொசுக்குன்னு லிப் டூ லிப் கொடுக்கிறார்கள். லிப் டூ லிப்புக்கு பெயர் போன பாலிவுட்டே பேஃபிக்ரேவை பார்த்து மிரண்டு போயுள்ளது.

ரன்வீர்

ரன்வீர் சிங் கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்ணாடி முன்பு நிர்வாணமாக நின்று செல்ஃபி எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தார்.

நிர்வாண காட்சி

நிர்வாண காட்சி

நான் படத்தில் நிர்வாணமாக வருகிறேன். சென்சாரில் கத்தரிக்காமல் இருந்தால் என் பின்னழகை நீங்கள் பார்க்கலாம். தியேட்டரில் ரசிகர்களுடன் சேர்ந்து அந்த நிர்வாண காட்சியை பார்க்க ஆவலாக உள்ளேன் என ரன்வீர் சிங் தெரிவித்துள்ளார்.

ஆமீர் கான்

ஆமீர் கான்

பிகே படத்திற்காக ஆமீர் கான் கையில் ஒரு ரேடியோவை வைத்துக் கொண்டு நிர்வாணமாக வந்த காட்சியால் அப்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் ரன்வீர் சிங் வேறு நிர்வாணமாக நடித்துள்ளார்.

English summary
Ranveer Singh has acted in nude scenes for his upcoming movie Befikre being directed by Aditya Chopra.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil