Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் பிறந்தநாள்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் சர்ப்ரைஸ்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து சிறப்பான இயக்குனர்களுடன் இணைந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டில் அவரது மாவீரன் படம் வெளியாகி நல்ல வரவேற்பையும் தொடர்ந்து சிறப்பான வசூலையும் பெற்றது. இந்நிலையில் கடந்த மாதத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவரது அயலான் படம் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்தது. இந்த படம் ரசிகர்களை சிறப்பாக கவர்ந்து வெற்றி படமாக மாறியுள்ளது. ஏலியனை மையமாக வைத்து சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் வெளியான இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடினர்.

இந்தப் படங்களை தொடர்ந்து தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் எஸ் 21 படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப்படத்தின் சூட்டிங் காஷ்மீர், சென்னை, பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் சூட்டிங் நிறைவடையவுள்ள நிலையில் படத்தின் டைட்டில் வரும் 17ம் தேதி சிவகார்த்திகேயனின் பிறந்தநாளையொட்டி வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த நாளில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாடும்வகையில் அவரது அடுத்தப்படத்தின் பூஜையும் போடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

On Actor Sivakarthikeyans birthday SK21 movie team plans for Surprise to fans

நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த வெற்றி படங்களில் நடித்து வருகிறார், அவர் தன்னுடைய எஸ்கே 21 படத்தில் தற்போது பிஸியாக நடித்து வருகிறார். விரைவில் இந்த படத்தின் சூட்டிங் நிறைவடைய உள்ளது. இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ள நிலையில் அவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்து வருகிறார். படத்தின் சூட்டிங் முன்னதாக காஷ்மீரில் தொடர்ந்து மூன்று மாதங்கள் கடுமையான பனி மற்றும் குளிருக்கிடையில் நடத்தி முடிக்கப்பட்டது.

விரைவில் நிறைவடையும் எஸ்கே21 சூட்டிங்: இதையடுத்து சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களிலும் படத்தின் அடுத்தடுத்த கட்ட ஷூட்டிங்குகள் நடந்து வருகின்றன. கடந்த ஆண்டில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் மற்றும் கடந்த மாதத்தில் பொங்கலை ஒட்டி வெளியான அயலான் படங்கள் அவருக்கு சிறப்பாக கை கொடுத்துள்ள நிலையில் அடுத்ததாக எஸ்கே21 படம் நல்ல விமர்சனங்களுடன் அவருக்கு ஹட்ரிக் வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் டைட்டில் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் வரும் 17ஆம் தேதி சிவகார்த்திகேயன் பிறந்த நாளை ஒட்டி படத்தின் டைட்டில் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் பிறந்தநாள் ட்ரீட்: மேலும் படத்தின் பர்ஸ்ட் லுக்கும் அன்றைய தினம் வெளியாக உள்ளதாகவும் கூறப்பட்டது. இதனால் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இந்நிலையில் தற்போது இதில் மற்றொரு ட்விஸ்ட்டாக அன்றைய தினமே படத்தின் டீசரும் வெளியாக உள்ளதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன. இது சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் அவரது ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே அவர் அடுத்ததாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் இணையவுள்ள எஸ்கே 23 படத்தின் பூஜையும் அன்றைய தினம் நடக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

சீரியஸ் கதைக்களம்: அடுத்தடுத்த படங்களில் தன்னை சிறப்பாக இணைத்து வருகிறார் சிவகார்த்திகேயன். அவருக்கு எஸ்கே 21 படம் எப்படி அமையும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். சிவகார்த்திகேயன் படங்களில் எப்போதுமே காமெடிக்கு முக்கியத்துவம் தரப்பட்டு திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் எஸ்கே21 படத்தில் காமெடி இல்லாமல், விஜய்யின் துப்பாக்கி போன்று கதை தொடர்ந்து சீரியஸ் கதைக்களத்தில் இருக்கும் என்றும் இந்தப் படத்தில் வித்தியாசமான சிவகார்த்திகேயனை ரசிகர்கள் பார்க்க முடியும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X