வம்பில் மாட்டிவிட்ட நடிகை: நைசாக எஸ்கேப் ஆன ஜீவா
Recommended Video

சென்னை: சூப்பர் ஸ்டார் ரேஸில் தான் இல்லை என்பதை தெளிவாக கூறியுள்ளார் ஜீவா.
ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா, நடாஷா சிங், மலையாள இயக்குனர் லால் ஜோஸ் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் ஜிப்ஸி. படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
படத்தில் பெரிய விஷயங்களை பற்றி எல்லாம் பேசியிருப்பது தெரிகிறது.
ட்விட்டர்
ஜிப்ஸி படத்தின் ஹீரோயின் நடாஷா சிங் டீஸரை ட்விட்டரில் ஷேர் செய்தார். இதை பார்த்த ஜீவா, நடாஷாவை ட்விட்டருக்கு வரவேற்று ரசிகர்களை அவரை ஆதரிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
ஜீவா
ஜீவாவின் ட்வீட்டை பார்த்த நடாஷாவோ, நன்றி சூப்பர் ஸ்டார் என்று பதில் ட்வீட் போட்டார். தமிழகத்தில் நடக்கும் சூப்பர் ஸ்டார் கோதா பற்றி தெரியாமல் சொல்லிவிட்டார் பாவம்.
ரஜினி
நடாஷாவின் பதில் ட்வீட்டை பார்த்த ஜீவா, ஒரேயொரு சூப்பர் ஸ்டார் தான் அது தலைவர் என்று பதில் அளித்துவிட்டார். அவரின் பதிலை ரஜினி ரசிகர்கள் வரவேற்று பாராட்டியுள்ளனர்.
சீமான்
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ரியல் சூப்பர் ஸ்டார் சிம்பு என்று கூறியதை ஒருவர் நினைவூட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











