ஒருவன் வருவான்.. விஷ்ணு எடவன் வரிகளில்.. தளபதி விஜய்க்கு செம ட்ரிப்யூட்!
தளபதி விஜய்க்கு மரியாதை செலுத்தும் "ஒருவன் வருவான்" பாடலின் அதிகாரப்பூர்வ டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இசைப் படைப்பு, விஜயின் கலைப் பயணத்திற்கு வழங்கப்படும் ஒரு சிறப்பு அங்கீகாரமாகும்.
வத்ஷன் அவர்களின் அர்ப்பணிப்பில் உருவான இந்த டீசர், தளபதி விஜயின் மகத்தான ஆளுமை, அவரது ஊக்கப்படுத்தும் குணம் மற்றும் அவர் ஏற்படுத்தும் தாக்கத்தை இசை மற்றும் காட்சியமைப்புகளின் வழியாக மிகத் துல்லியமாக வெளிப்படுத்துகிறது.

அருண் ஆனந்த் வழங்கும் 'ஆன் அரிஷ் மியூசிக்கல்' தயாரிப்பில் உருவான இத்தீசர், இசையமைப்பாளர் அரிஷின் பிரம்மாண்ட இசை வடிவத்துடனும், விஷ்ணு ஏதவன் எழுதிய ஆழமான வரிகளுடனும் இணைந்து ரசிகர்களின் ஆர்வத்தை பலமடங்கு உயர்த்தியுள்ளது.
துவா ரஜனி இயக்கத்திலான இத்தீசர், கண்கவர் காட்சியமைப்புடன், உணர்வுபூர்வமான தருணங்கள் மற்றும் மாஸ் எலிவேஷன் ஷாட்களுடன் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. சமூக ஊடகங்களில் இது வேகமாகப் பகிரப்பட்டு, நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது.

"ஒருவன் வருவான்" வெறும் பாடலல்ல. தளபதி விஜயின் மரபையும், ரசிகர்களின் உணர்வுகளையும் கொண்டாடும் ஒரு கலைமரியாதையாக, முழுப் பாடல் வெளியீட்டிற்கான எதிர்பார்ப்பை இது மேலும் தூண்டியுள்ளது.


Click it and Unblock the Notifications











