twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்திய சினிமாவும் ரூ.1000 கோடி கலெக்சனை எட்டமுடியும்... கமல்ஹாசன்

    By Mayura Akilan
    |

    பெங்களூர்: இந்திய சினிமாவும் 1000 கோடி ரூபாய்வரை வசூலிக்க முடியும். அந்த அளவிற்கு ரசிகர்கள் இந்தியாவில் இருக்கின்றனர் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

    இந்திய தொழில் வர்த்தகசபைக் கூட்டமைப்பு சார்பில், அக்டோபர் 29,30ம் தேதி பெங்களூரில் இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு வர்த்தக கருத்தரங்கம் நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்ட நடிகரும் இயக்குநருமான கமல்ஹாசன், இந்திய சினிமா பற்றி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசியதாவது:

    சிறந்த தொழில்நுட்பம்

    சிறந்த தொழில்நுட்பம்

    இந்திய சினிமாவிலும் சிறந்த தொழில்நுட்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஹாலிவுட்டிற்கு இணையான அளவிற்கு இந்திய சினிமாவும் வசூவில் சாதிக்க முடியும். அதற்கு வெளிப்படைத்தன்மை அவசியம்.

    லீக் ஆக கூடாது

    லீக் ஆக கூடாது

    பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றினால் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவேண்டும். ஓட்டையிருந்தால் அது லீக் ஆகிவிடும். எனவே சிறந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி சினிமாவை தயாரித்தால் வசூலில் சாதிக்க முடியும்.

    ரூ.1000 கோடி

    ரூ.1000 கோடி

    இந்திய சினிமாவில் 100 கோடி, 200 கோடி வசூல் என்பதெல்லாம் சாதாரண விசயம். ரூ.1000 கோடி வசூலிக்க வேண்டும். அந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனால் இப்போது 10 சதவிகித ரசிகர்களை மட்டுமே சினிமா சென்றடைகிறது.

    நேர்மை அவசியம்

    நேர்மை அவசியம்

    சினிமா தொழிலில் நேர்மையும், வெளிப்படைத்தன்மையும் இருந்தால் ஹாலிவுட் படங்களைப் போல ரூ.1000 கோடியை நம்மாலும் வசூலிக்க முடியும்.

    என் படங்கள் வசூலிக்கும்

    என் படங்கள் வசூலிக்கும்

    ரசிகர்கள் விரும்பும் வகையில் படங்கள் கொடுத்தால் கண்டிப்பாக ரூ.1000 கோடி வரை வசூல் செய்துவிடலாம். வருங்காலத்தில் இதை செய்து காட்டவேண்டும் என்ற ஆர்வம் என்னுள் உள்ளது.

    பெங்களூரில் கருத்தரங்கு

    பெங்களூரில் கருத்தரங்கு

    இந்தியாவில் 60 சதவீதத் திரைப்படங்கள் தென்னிந்தியாவில் தயாராகின்றன. இதுவரை மும்பையில் ஃபிக்கியின் சார்பில், மாநாடு, கருத்தரங்கு நடத்தப்பட்டு வந்தன. முதல் முறையாக தகவல் தொழில்நுட்ப நகரமான பெங்களூருவில் பொழுதுபோக்கு வர்த்தகக் கருத்தரங்கு நடத்தப்பட்டது.

    இளைஞர்களுக்கு பயிற்சி

    இளைஞர்களுக்கு பயிற்சி

    உலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. அதுகுறித்து தீவிரமாக இந்தக் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது. இந்தக் கருத்தரங்கு மூலம் திரைப்படத் துறையும், அரசும் அடுத்த கட்டத்தை அடையத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். திரைப்படத் துறையில் நுழையும் இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கும் வகையில், தொழில் பயிற்சி மையங்கள் அமைக்க வேண்டும் என்றார் கமல்ஹாசன்.

    English summary
    Indian Cinema collections are transparent, the industry’s collections will be more than that of Hollywood. In our country we have a 1-billion strong audience and it is not difficult to make 10 per cent of that population watch a super-hit film. Even if 10 per cent watch a movie, at today’s prices, that means Rs 1,000 crores collected from theatres alone. We are not looking into the transparency and honesty angle adequately.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X