பகையாவது மண்ணாங்கட்டியாவது: தனுஷை வாழ்த்திய சிம்பு
Recommended Video

சென்னை: தனுஷின் வட சென்னை படத்திற்கு சிம்பு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்துள்ள வட சென்னை படம் இன்று ரிலீஸாகியுள்ளது. 3 ஆண்டுகள் இந்த படத்திற்காக காத்திருந்தார் தனுஷ்.
இந்நிலையில் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
சிம்பு
என் அருமை நண்பர் தனுஷ், வெற்றிமாறன் மற்றும் குழுவுக்கு நான் மற்றும் என் ரசிகர்கள் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள். திரையில் நமக்கு இடையே போட்டி இருக்கும் ஆனால் சமூக வலைதளத்தில் அல்ல. உங்களின் நல்ல படங்களை ஆதரிக்குமாறு என் ரசிகர்கள், ஃபாலோயர்களை கேட்டுக் கொள்கிறேன் என்று சிம்பு வட சென்னை படம் வெற்றி பெற வாழ்த்தியுள்ளார்.
தனுஷ்
வட சென்னை படத்திற்கு வாழ்த்து தெரிவித்த சிம்புவுக்கு தனுஷ் ரசிகர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
அனிருத்
அத்திம்பேர் தனுஷின் படமான வட சென்னைக்கு இசையமைப்பாளர் அனிருத்தும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிப்பு
வட சென்னை படத்தில் தனுஷ் அன்பு கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பதாக படம் பார்த்தவர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











