மீண்டும் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கும் கார்த்தி?
சென்னை: கார்த்தி பாண்டிராஜ் இயக்கத்தில் மீண்டும் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் வெளியாகி ஹிட்டாகியுள்ளது. கார்த்தியை கிராமத்து கெட்டப்பில் பார்த்து ரசிகர்கள் அசந்துவிட்டனர்.

குடும்பத்தோடு பார்க்கும் கதையாக இருப்பதால் அனைவரும் கொண்டாடுகிறார்கள். தெலுங்கிலும் சின்னபாபு என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் கார்த்தியை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்க விரும்புகிறாராம் பாண்டிராஜ்.
கார்த்தியிடம் அவர் ஒரு கதை சொல்லியதாகவும், அதை கேட்ட கார்த்தி நாம் கண்டிப்பாக இந்த படத்தை பண்ணுகிறோம் என்று சந்தோஷமாக கூறியதாகவும் கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள்.
அப்படி என்றால் கார்த்திக்கு இன்னொரு ஹிட் பார்சல்.
Comments


Click it and Unblock the Notifications