இதயமே நொறுங்கிடுச்சு விஜய் அண்ணா.. உன் படம் எப்போ வருதோ அப்போ தான் பொங்கல்.. பராசக்தி நடிகர் உருக்கம்!
சென்னை: தளபதி விஜய்க்கு எப்போதுமே கோலிவுட்டில் இருந்து ஒரு ஆதரவு குரல் வருகிறது என்றால் அது ரவி மோகனின் குரலாகவே இருக்கும். ஜன நாயகன் படத்துக்கு இன்னமும் சென்சார் கிடைக்காத நிலையில், ஜனவரி 9ம் தேதி படம் வெளியாகாது என்பது உறுதியாகி விட்டது.
இந்நிலையில், ஜனவரி 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள பராசக்தி படத்தில் வில்லனாக நடித்துள்ள நடிகர் ரவி மோகன் தனது முழு ஆதரவும் விஜய் அண்ணனுக்குத்தான் என எக்ஸ் பக்கத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

மேலும், விஜய் அண்ணா படம் எப்போ வருதோ அப்போ தான் பொங்கல் என்றும் ரவி மோகன் தனது ட்வீட்டில் பதிவிட்டுள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
போன வருஷம் பொங்கலுக்கும் ரவி மோகன்: கடந்த ஆண்டு பொங்கலுக்கு ரவி மோகன், நித்யா மேனன் நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வெளியான காதலிக்க நேரமில்லை திரைப்படம் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஏகப்பட்ட ரசிகர்களை ஈர்த்தது. ஆனால், படம் நினைத்த அளவுக்கு பெரிதாக ஓடவில்லை. ஆனால், இந்த பொங்கலுக்கு பராசக்தி படத்தில் அவர் வில்லனாக மிரட்டியுள்ள நிலையில், அதை பார்க்கவே ரசிகர்கள் ரெடியாக காத்திருக்கின்றனர்.
இதயமே நொறுங்கிடுச்சு: ஜன நாயகன் மற்றும் பராசக்தி 2 படங்களும் இந்த பொங்கலுக்கு வெளியானாலும், ரசிகர்கள் 2 படங்களையும் பார்த்து கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜன நாயகன் படத்துக்கு சென்சார் பிரச்சனை ஏற்பட்டு படம் ஜனவரி 9 வெளியாகாது என கேவிஎன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட நிலையில், அதை ஷேர் செய்த ரவி மோகன் இதயமே நொறுங்கிடுச்சு விஜய் அண்ணா என ட்வீட் ஒன்றை பதிவிட்டு தனது ஆதரவையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.
தம்பியா துணை நிற்பேன்: "ஹார்ட் ப்ரோக்கன் விஜய் அண்ணா, ஒரு தம்பியா உங்களோடு துணை நிற்கும் பல லட்சம் தம்பிகளோடு நானும் ஒருவனாக துணை நிற்பேன்; உங்களுக்கு எந்த தேதியும் தேவையில்லை, நீங்கதான் ஓபனிங்கே, ஜன நாயகன் படம் எப்போ வருதோ அப்போ தான் பொங்கல் ஆரம்பிக்கும்" என ரவி மோகன் உருக்கமான பதிவை பதிவிட்டு தனது முழு ஆதரவையும் அளித்துள்ளார். ஏற்கனவே இயக்குநர் அஜய் ஞானமுத்து, நடிகர் சிபிராஜ் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் விஜய்க்கு ஆதரவாக தங்கள் குரலை பதிவு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











