Ravi Mohan: பராசக்தி வில்லனாக மிரட்டி விட்ட ரவி மோகன்.. மனசாட்சியே இல்லாத வில்லன்னு நிரூபிச்சுட்டாரே

சென்னை: சிவகார்த்திகேயனின் 25வது படம் என்றதும் பராசக்தி படத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டால், படத்தின் வில்லனாக நடிக்கிறார் ரவி மோகன் என்ற தகவல் மேலும் ஆச்சரியத்தை கூட்டியது. நிமிர்ந்து நில், போகன் போன்ற படங்களில் வில்லனிசமான நடிப்பை இவர் வெளிப்படுத்தி இருந்தாலும், பராசக்தி போன்ற பீரியாடிக் படத்தில் என்ன மாதிரியான நடிப்பை வெளிப்படுத்துவார் என்ற ஆர்வம் பலரும், கதாநாயகன் ஒரு படத்திற்கே வில்லனாக நடிக்கும் அளவுக்கு படத்தை தூக்கி நிறுத்தும் அளவுக்கு வில்லனிசத்தை வெளிப்படுத்துவாரா என்ற கேள்வி பலருக்கும் இருந்தது.

ஆனால் இந்த கேள்விகள் மற்றும் சந்தேகங்களை எல்லாம் அடித்து துவம்சம் செய்து தவிடுபொடி ஆக்கி உள்ளார் என்று தான் கூறவேண்டும். ஏற்கனவே வாழ்க்கை மீதும் அவரது குடும்பத்தின் மீதும் உள்ள வெறுப்பு, அசுர பலம் பொருந்திய அரசாங்க பொறுப்பு, தன்னை அவமானத்திற்கு ஆளாக்கிய கதாநாயகனை பழிவாங்க வேண்டும் என்ற ஆத்திரமும் நிறைந்த ஒரு வில்லனாக ரவி மோகன் மொத்த படத்திலும் அலங்கரிக்கிறார்.

Parasakthi Ravi Mohan Villain Character Which is Very Good and Works Well For Screen Play
Photo Credit:

வில்லன்: கருணை என்றால் என்ன கருணைக் கிழங்கா என்று கேட்கும் அளவுக்கான வில்லத்தனமான காட்சிகளை அவருக்கு வைத்து காட்சிக்கு காட்சி வில்லனாக்கி அழகு பார்த்துள்ளார் இயக்குநர் சுதா கொங்கரா. எல்லா நடிகர்களுக்குமே அவரவர் கண்களும் அது வெளிப்படுத்தும் உணர்ச்சிகளும் மொழிகளும் மிகவும் முக்கியம். அதுவும் வில்லனுக்கு அவை ரொம்பவே முக்கியம்.

மிரட்டிய கண்கள்: தனது கதாபாத்திரம் எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்று நன்கு உள்வாங்கி பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். பச்சிளம் குழந்தையோடு நிற்கும் பெண்ணைச் சுடச் சொல்லும்போதும் சரி, தன் எதிரில் நிற்கும் அதிகாரியை உட்காரச் சொல்லும்போதும் சரி, முதலமைச்சரையே மிரட்டும் போதும், அதர்வாவை கொல்லும்போது, இவனை காப்பாற்றி சிறந்த செவிலியர்னு விருது வாங்கப் போகிறாயா என்று கேள்வி கேட்கும்போதும் என ரவி மோகன் ராட்சச வில்லனிசத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

Parasakthi Ravi Mohan Villain Character Which is Very Good and Works Well For Screen Play
Photo Credit:

சிறந்த நடிப்பு: அவரது இந்த நடிப்பு படத்தின் திரையோட்டத்திற்கு பெரும் பங்காற்றி உள்ளது. ரவி மோகனுக்கு காலத்திற்கும் நின்று பேசும் கதாபாத்திரங்களில் ஒன்றாக அவரது திரு கதாபாத்திரம் அமைந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் அவரது கதாபாத்திர அமைப்பு என்பது, மொழிப்போர் காலகட்டத்தில் நடைபெற்ற பல அதிகார கொலைகளுக்கு மத்திய அரசு நேரடி காரணம் இல்லை என்பது போல சித்தரித்தது விமர்சிக்கப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X