ஆர்கானிக் வியூஸ்.. ஜன நாயகனை சீண்டிய பராசக்தி.. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு செம கிளாஷ் இருக்கு!

சென்னை: ஜன நாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான "தளபதி கச்சேரி" பாடல் திடீரென நேற்று 15 மில்லியனில் இருந்து 33 மில்லியன் வரை சென்ற நிலையில், விஜய் ஹேட்டர்கள் மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் விஜய் காசு கொடுத்து பாட்ஸ் பண்ணி வியூஸ் ஏற்றி விட்டதாக ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். யூடியூப் நிர்வாகத்திடமே சில ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அப்படியெல்லாம் பண்ண முடியாது என்றும் அதிக வியூஸ் வரும் போது, அதை ஆய்வு செய்து தான் காட்டுகிறோம் என அறிவித்தது.

இந்நிலையில், பராசக்தி படத்தின் அடி அலையே பாடல் 15 மில்லியன் வியூஸ் அள்ளியிருப்பதாக சற்றுமுன் டான் பிக்சர்ஸ் வெளியிட்ட போஸ்ட்டில், "ஆர்கானிக்" வியூஸ் என்பதை ஹைலைட் பண்ணி குறிப்பிட்டுள்ளனர்.

Parasakthi team teases Vijay s Jana Nayagan with their Organic Views comment
Photo Credit:

இதை பார்த்து காண்டான தளபதி ரசிகர்கள், அப்போ எங்களுடைய ஜன நாயகன் வியூஸ் ஆர்கானிக் இல்லைன்னு குத்தி காட்டுறியா என சண்டைக்கு சென்றுள்ளனர்.

15 மில்லியன் ஆர்கானிக் வியூஸ்: ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கியுள்ள சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், அந்த படத்திற்காக ஜி.வி. பிரகாஷ் இசையமைத்த "அடி அலையே" பாடல் கடந்த வாரம் வெளியானது. சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா நடனமாடிய அந்த பாடல் தற்போது 15 மில்லியன் வியூஸை ஆர்கானிக்காக தொட்டிருப்பதாக டான் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

டென்ஷனான தளபதி ரசிகர்கள்: ஆர்கானிக் வியூஸ் என டான் பிக்சர்ஸ் குறிப்பிட்டதை பார்த்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஜன நாயகனை இப்படி டைரக்ட்டாகவே போட்டு பொளக்குறீங்களே சூப்பர் என கொண்டாட ஆரம்பித்த நிலையில், தளபதி விஜய் ரசிகர்கள் ரொம்பவே டென்ஷன் ஆகிவிட்டனர். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு கண்டிப்பாக படம் வரட்டும், யாரு பாக்ஸ் ஆபீஸ் வின்னர் என பார்க்கத்தான் போறீங்க என சவால் விட்டு ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டு சோஷியல் மீடியா சண்டையை ஆரம்பித்துள்ளனர்.

சண்டை கன்ஃபார்ம்: ஜன நாயகன் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி வெளியாகிறது. சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா நடித்துள்ள பராசக்தி திரைப்படம் ஜனவரி 14ம் தேதி வெளியாகிறது. பொங்கல் வின்னர் யார் என்கிற பாக்ஸ் ஆபீஸ் சண்டை கண்டிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X