Parasakthi Box Office: சன்டே சாயங்காலமும் பச்சை புரட்சியா இருக்கே.. என்னடா இது பராசக்திக்கு வந்த சோதனை?
சென்னை: டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா, ரவி மோகன், அதர்வா உள்ளிட்ட பலர் நடித்த பராசக்தி திரைப்படம் கடந்த ஜனவரி 10ம் தேதி வெளியானது. அமரன் படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக இந்த படம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாக்ஸ் ஆபீஸில் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்த படத்தை ரிலீஸ் செய்த நிலையில், அந்த நிறுவனத்துக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வெளியான முதல் 2 நாளுக்குப் பிறகு டோட்டலாக படுத்துவிட்ட பராசக்தி பாக்ஸ் ஆபீஸ், பொங்கல் பண்டிகையன்று மீண்டும் சற்று அதிகரித்தது.

ஆனால், வா வாத்தியார், தலைவர் தம்பி தலைமையில் படங்களின் வரவு மீண்டும் பராசக்தி படத்தின் வசூலுக்கு வேட்டு வைத்துவிட்டன.
குறைந்த தியேட்டர்கள்: விஜய் படம் வெளியாகாத நிலையில், சோலோவாக அதிக திரையரங்குகளில் வெளியான பராசக்தி திரைப்படம் முதல் நாள் மற்றும் 2வது நாள் கூட ஹவுஸ்ஃபுல் போர்டு மாட்ட முடியாமல் ஆரஞ்சு நிறத்தில் 80 சதவீத அரங்கு நிறைந்த காட்சிகளுடன் தான் ஓடியது. திங்கட்கிழமை அது அப்படியே 20 சதவீதமாக குறைந்தது படத்தை நம்பி வெளியிட்ட தியேட்டர் ஓனர்களை அச்சத்தில் ஆழ்த்தியது. அடுத்தடுத்து புதிய படங்கள் வெளியான நிலையில், தியேட்டர் ஓனர்கள் பராசக்தி படத்தின் காட்சிகளை குறைத்தனர். மேலும், மெயின் ஸ்க்ரினில் தலைவர் தம்பி தலைமையில் படத்தை சில தியேட்டர்கள் மாற்றிவிட்டதாக ரோகிணி உள்ளிட்ட திரையரங்குகள் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்தன.

சன்டே பாக்ஸ் ஆபீஸ் எப்படி?: பராசக்தி திரைப்படம் பொங்கலுக்கு 5.5 கோடி வசூலை தமிழ்நாட்டில் அள்ளிய நிலையில், மாட்டு பொங்கலுக்கு 5 கோடி வசூலாக குறைந்தது. சனிக்கிழமை மற்றும் காணும் பொங்கலுக்கு 4.85 கோடியாக வசூல் குறைய ஞாயிற்றுக்கிழமையான இன்றும் இதுவரை 1.52 கோடி தான் வசூல் வந்திருப்பதாக சாக்னிக் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், புக் மை ஷோவிலும் சன்டே ஈவ்னிங் மற்றும் நைட் ஷோக்கள் பல இடங்களில் பச்சை புரட்சியையே நடத்தி வருகின்றன. மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் ஒரு சில இடங்களில் ஆரஞ்சு நிறம் தெரிகிறது. ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் இன்றும் நல்ல டிக்கெட் புக்கிங் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பராசக்தி வசூல்: நாளை திங்கட்கிழமை முதல் மீண்டும் பராசக்தி வசூல் அடியோடு குறைந்துவிடும் என்கின்றனர். பல சிங்கிள் ஸ்க்ரீன் தியேட்டர்களில் படத்தை ஏற்கனவே தூக்கிவிட்டதாக கூறுகின்றனர். இதுவரை இந்தியளவில் 47.62 கோடி வசூலை பராசக்தி படம் அள்ளியுள்ள நிலையில், அதிகபட்சம் இந்தியாவில் 50 முதல் 55 கோடி வரை வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் 75 கோடி வசூலை இந்த படம் மொத்தமாக வசூல் செய்யும் என பாக்ஸ் ஆபீஸ் டிராக்கர்கள் தெரிவித்துள்ளனர். தயாரிப்பு நிறுவனம் 2 நாட்களுக்குப் பிறகு அதிகாரப்பூர்வ வசூல் கணக்கை அறிவிப்பதையும் நிறுத்திவிட்டது. சிவகார்த்திகேயன் அடுத்து கண்டிப்பாக எண்டர்டெயின்மெண்ட் படத்தையே கொடுப்பேன் என்று சொல்லும் அளவுக்கு பராசக்தி படம் அவரையும் பாடாய் படுத்திவிட்டது.


Click it and Unblock the Notifications











