ஹீரோ .. ஹீரோ ..

By Staff

நடிகர் பார்த்திபன் நடிக்கும் ரெளடி படத்தின் பட பூஜை விழாவில் குழந்தைகள் கையில் அரிவாள்கள், மதுக் கோப்பைகள், சைக்கில்செயின்கள் கொடுத்து நிறுத்தப்பட்டிருந்தது பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது.

இந்தப் படத்தின் பூஜை சென்னை வட பழனியில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் நடந்தது. படத்தின் துவக்க விழாவுக்குப் போனவர்களுக்குபெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

பூஜை நடந்த ஸ்டுடியோவுக்கு வெளியே சில குழந்தைகள் கைலி கட்டி நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்களது கைகளில் அரிவாள்கள், மதுக்கோப்பைகள், சைக்கிள் செயின்கள், டம்மி வெடிகுண்டுகள். இதைப் பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

பூஜைக்கு வந்த பார்த்திபனும் சேர்ந்து அதிர்ந்துவிட்டார். தன்னிடம் தெரிவிக்காமல் இயக்குனர் இதுபோன்ற ஏற்பாட்டை செய்து விட்டதாகஅவர் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.

பின்னர் அந்தக் குழந்தைகளை உடனே அங்கிருந்து அகற்றச் சொன்ன பார்த்திபன், இயக்குனரை தனியே கூட்டிச் சென்று வறுத்துஎடுத்துவிட்டு கோபத்துடன் திரும்பி வந்தார்.

வழக்கமாகவே குழந்தைகள் மீது அளவு கடந்த பாசம் கொண்டவர் பார்த்திபன். கும்பகோணம் தீ விபத்து குறித்து நடந்த அன்று பார்த்திபன்சிறு குழந்தை மாதிரி அழுதது பலரையும் கண் கசியச் செய்தது நினைவுகூறத்தக்கது.


பட பூஜையில் இயக்குனர் செய்த இந்தத் தவறு காரணமாக விழா முழுவதுமே பார்த்திபன் முகத்தில் வழக்கமான மகிழ்ச்சியைக் காணமுடியவில்லை. ஒருவித டென்சனுடனேயே இருந்துவிட்டுக் கிளம்பிப் போனார்.

சில சினிமாக்காரர்களின் கிறுக்குத் தனங்களைப் பார்க்கும்போது தமிழ்நாட்டுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் போல பத்து பேர் கண்டிப்பாகதேவை என்று தான் தோன்றுகிறது!


More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X