ஹீரோ .. ஹீரோ ..

By Staff

பார்த்திபனை அவரது வீட்டிலேயே மடக்கினோம். என்ன சார் ஏதோ படம் எடுக்குறீங்களாமே என்றோம்.

ஏதோ படம் இல்ல.. தமிழ்ப் படம் என்றார் எடக்கு மடக்கு பார்த்தி.

பார்த்திபனிடம் மாட்டிய வடிவேலு மாதிரி பாவமாய் முழித்தோம்.

படம் பேரு கூட வச்சுட்டேன். படம் பேரு இவன் என்றார்.
என்னது இவனா என்று கேட்க, அவனே தான் என்றார்.

ஐய்யய்யோ மாட்டிக்கிட்டோம் டா மாட்டிக்கிட்டோம் டா என்று கத்த வேண்டும் போல இருந்தது. ஒரு வழியாய்அவர் போக்கிலேயே போய் அவரை சீரியசாக்கி பேச வைத்தபோது கிடைத்த தகவல்கள் இதோ.

நடிகர் பார்த்திபனாக கொஞ்ச காலம் நடித்து வந்த டைரக்டர் பார்த்திபன் மீண்டும் டைரக்ஷன் பொறுப்புக்கு வருகிறார்.

அவரது சொந்தக் கம்பெனியான பிலிம் பிரேமர்ஸ் நிறுவனம் தான் இவன் படத்தைத் தயாரிக்கிறது. கதை-திரைக்கதை- வசனம்ஆகிய பொறுப்புகளுடன் டைரக்ஷன் பொறுப்பையும் சேர்த்து கவனிக்கவுள்ளார் பார்த்திபன்.

வித்தியாசமான கதையமைப்பு கொண்ட இந்தப் படத்தில் பார்த்திபனின் ஜோடியாக நடிக்கும் நடிகை உள்ளிட்ட பல்வேறுகலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஏராளமான வில்லன்கள் இருப்பார்களாம்இந்தப் படத்தில்.

பார்த்திபன்-வடிவேலு காம்பினேஷன் மிக பேமஸ் என்பதால் காமெடிக்கு வடிவேலுவை புக் செய்துவிட்டார். எக்ஸ்ட்ரா காமடிக்குபம்மல்.கே.சம்பந்தம் புகழ் டி.பி.கஜேந்திரனும் இருக்கிறார்.

பிரபல விமர்சகர் சுப்புடுவும் இந்தப் படத்தில் நடிக்கப் போகிறார். அவர் இந்தப் படத்தில் சுப்புடுவாகவே நடிப்பதுகுறிப்பிடத்தக்கது.

இசைஞானி இளையராஜா தான் இசை.

நிச்சயம் "இவன்" எல்லோரையம் கவர்வான் என்றார் புன்னகையுடன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X