Don't Miss!
- News
90% அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரியாது! மழை பெய்தால் கூட திராவிடமாடல் தான் காரணமாம்! அண்ணாமலை காட்டம்
- Finance
ஊழியர்கள் சம்பளத்தை இரட்டிப்பாக்கும் மைக்ரோசாப்ட்.. என்ன காரணம்?
- Sports
ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.. ராகுல் திரிபாதி மரண பேட்டிங்.. ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய மும்பை
- Automobiles
இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஹூண்டாய் நிறுவனத்தை பாக்கவே பாவமா இருக்கு... என்ன ஆச்சு தெரியுமா?
- Technology
ரூ.20,000 விலைப்பிரிவு: அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு- 12 ஜிபி ரேம், 67வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங்
- Lifestyle
மேங்கோ கிரனிட்டா
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
“இரவின் நிழல்“ ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாட்டு எழுதும் பார்த்திபன்!
சென்னை : இரவின் நிழல் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையில் பார்த்திபன் ஒரு பாடலை எழுதியுள்ளார்.
இந்த தகவலை பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இரவின் நிழல் ஒரே ஷாட்டில் உருவாகி வரும் இந்தப் படத்தில் அவரே நடித்தும் வருகிறார்.
அடேங்கப்பா..
தனுஷை
தொடர்ந்து..
போயஸ்
கார்டனில்
2
வீடுகளை
வாங்கிய
பிரபல
நடிகை..
அதுவும்
4BHKவாம்!

புதுமை விரும்பி
தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் வெற்றிகண்டவர் பார்த்திபன். புதுமை விரும்பியான இவர் தனது படங்கள் மூலமாக பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இவர் மட்டுமே இயக்கி, தயாரித்து, நடித்த ஒத்த செருப்பு சைஸ் 7, ஆஸ்கர் விருதுக்கு சென்று வந்தது, சிறந்த படமாக தேசிய விருதையும் பெற்றது.

ஒரே ஷாட்டில்
தற்போது இயக்குனர் பார்த்திபன், இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்துள்ளார். அபிஷேக் பச்சன் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இதுதவிர இரவின் நிழல் என்கிற படத்தையும் இயக்கி வருகிறார் பார்த்திபன். இந்தப் படத்தில் மொத்தம் 340 பேர் பணியாற்றி அனைவரும் மனம் ஒருமித்து 90 நாள்கள் ஒத்திகை பார்த்து ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது.

ஒரு பாடல்
இந்நிலையில் இப்படத்திற்கு ஒரு பாடல் எழுதி உள்ளதாக நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில். இரவின் நிழல் படத்தின் பின்னணி இசைக்காக ஏ.ஆர் ரஹ்மான் குரலில் ஒரு ட்யூனை அனுப்பி என்னை எழுத சொன்னார். கேட்ட நொடி முதல் கிறங்கிக் கிடக்கிறேன் ஹையில் இறங்கி வந்து அந்த ட்யூனுக்கு வரி வடிவம் கொடுக்கும் முயற்சியில் ஒரு வாரம் மூழ்க, பதிவும் செய்யப்பட்டது.

சங்குக்குள் அடக்கப்பட்ட கங்கை
சங்குக்குள் அடக்கப்பட்ட கங்கை போல், முழு படத்தின் வீரியத்தையும் ஒரு பாடலில்.சிலிர்த்து சிறகடித்து பறக்கிறேன் பரவசத்தில். ரசித்து சமைத்தால் தானே இலைக்கு (திரைக்கு) வரும்போது ருசிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.