அது அப்படிதான்.. அரசியலில் விஜய்.. அஜித்துக்கு கிடைத்த பத்ம பூஷன் விருது.. பார்த்திபன் சொல்லிட்டாரே!

சென்னை: விஜய் அரசியலில் நுழைந்ததால் தான் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டதா என்கிற கேள்விக்கு நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் "அது அப்படிதான்" என படாரென அளித்த பதில் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. மேலும், அஜித் மற்றும் விஜய் செய்து வரும் ஸ்டண்ட் குறித்தும் ஓபனாக போட்டு உடைத்துவிட்டார் பார்த்திபன்.

"விஜய் வாழ்க, அஜித் வாழ்கன்னு சொல்றீங்க.. நீங்க எப்போ வாழப்போறீங்கன்னு" அஜித் குமார் இந்த வயதில் கேட்பதே ஒருவிதமான ஸ்டண்ட் தான் என்றும் அந்தளவுக்கு அவர் சொல்வதை கேட்கும் அளவுக்கு ரசிகர்கள் அவர் பக்கம் இருப்பதைத் தான் அவர் உணர்த்த வருகிறார் என்றும் பார்த்திபன் கூறியுள்ளார்.

vijay ajith kumar parthiban

அஜித்துக்கு பத்ம பூஷன் விருதை அறிவிக்க அவரது நம்பரையே மத்திய அரசு சார்பில் தன்னிடம் தான் போன் போட்டுக் கேட்டனர் என்றும் தன்னுடைய நண்பர் அஜித்துக்கு அந்த விருது கிடைத்தது ரொம்பவே மகிழ்ச்சி என்றும் பார்த்திபன் பேசியுள்ளார்.

விஜய் அரசியலால் அஜித்துக்கு விருது: துணிவு படத்துக்குப் பிறகு கடந்த 2 ஆண்டுகளாக அஜித்தின் நடிப்பில் எந்தவொரு படமும் வெளியாகாத நிலையில், கலைத்துறையில் சேவை செய்ததற்காக நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருதை திடீரென இப்போ அறிவிக்க என்ன காரணம் என பலரும் விமர்சித்து வரும் நிலையில், விஜய் அரசியலுக்கு வந்த நிலையில் தான் அஜித் குமாருக்கு விருது கொடுத்தாங்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, அதற்கு உடனடியாக "அது அப்படிதான்னு நினைக்கிறேன்" என அதிரடியாக பார்த்திபன் பதில் அளித்துள்ளார்.

விஜய் - அஜித் ஸ்டண்ட்: பல ஆண்டுகளாக தங்கள் ரசிகர்களை இருவரும் தங்களுக்கு தெரிந்த முறையில் ஸ்டண்ட் செய்து பாதுகாத்து வந்த நிலையில், தற்போது அஜித் குமார் ரசிகர்களை குடும்பத்தை பாருங்கனு சொல்ல காரணமும் ஒரு ஸ்டண்ட் தான் என பார்த்திபன் கூறியுள்ளார். விஜய்யும் அவரது போக்கில் சென்றுக் கொண்டிருக்கிறார். இப்போ வழிவிடுங்க நான் என் போக்கில் போகிறேன் என செய்தியாளர்களிடம் இருந்து எஸ்கேப் ஆகிவிட்டார் பார்த்திபன்.

விஜய்க்கு ஆதரவு: நடிகர் பார்த்திபன் முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்னே அவரை காலி செய்ய நினைக்கக் கூடாது. வரவேற்பு கொடுக்க வேண்டும் என்றும் முன்னணி ஹீரோ பல கோடி சம்பளத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வருகிறார் என்றால் நிச்சயம் மக்களுக்கு ஏதாவது செய்வார் என்று கூறியிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X