மம்மூட்டி மேல பொறாமை.. அந்த படத்துல நான் நடிக்க வேண்டியது.. பார்த்திபனின் ‘களம் காவல்’ விமர்சனம்!
சென்னை: ஜித்தின் கே. ஜோஸ் இயக்கத்தில் மம்மூட்டி, விநாயகன், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'களம் காவல்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியுள்ளது. 2 நாட்களில் 31.5 கோடி ரூபாய் வசூலை உலகளவில் ஈட்டியதாக அதிகாரப்பூர்வமாக மம்மூட்டி கம்பெனி அறிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமையும் படத்துக்கு கேரளா, தமிழ்நாடு மற்றும் ஓவர்சீஸில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், 40 கோடி வசூலை உலகளவில் படம் அள்ளியிருக்கும் என்று பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

கண்டிப்பாக இந்த முறை மம்மூட்டி திரைப்படம் 100 கோடி வசூலை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மம்மூட்டி மீது பொறாமை என களம் காவல் படத்துக்கு தனது ஸ்டைலில் பார்த்திபன் விமர்சனம் ஒன்றை கொடுத்துள்ளார்.
விநாயகன் தான் ஹீரோ: திமிரு, மரியான், ஜெயிலர் உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் நடித்த மலையாள நடிகர் விநாயகன் களம் காவல் படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். படத்தின் மெயின் வில்லனே மம்மூட்டி தான். வில்லனை நல்லவனாக்கும் எந்தவொரு முயற்சியையும் இயக்குநர் எடுக்காததும் தேவையில்லாத ஃபிளாஷ்பேக் சொல்லாததுமே இந்த படம் ரசிகர்களை கவர காரணமாக மாறியுள்ளது.
சயனைடு மோகன்: 36க்கும் மேற்பட்ட பெண்களை நிஜமாகவே சயனைடு மோகன் என்பவன் இப்படி காதலித்து ஏமாற்றி, பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளான். அதற்கான தண்டனையும் சட்டப்படி அவன் அனுபவித்து வரும் நிலையில், சயனைடு மோகன் போன்று பெண்களை ஏமாற்றி கொல்லும் கொடூர வில்லனாக நடித்து மம்மூட்டி மிரட்டியுள்ளார்.
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் பார்த்திபன்?: ராஜீவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி, அஜித் குமார், ஐஸ்வர்யா ராய், தபு, அப்பாஸ் உள்ளிட்ட பலர் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் முதலில் பார்த்திபன் தான் மம்மூட்டி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியது என்றும் ஆனால், கடைசியில் மம்மூட்டி வசம் அந்த படம் சென்று விட்டதாக பார்த்திபன் தனது பதிவில் குறிப்பிட்டு ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

மம்மூட்டி மீது பொறாமை: "Actually speaking ...actor
Mr mammooty is my பொறாமைக்குரிய வில்லன் ஒரு வகையில்...
எப்படி extra tempo வோட ஒரு செய்தியை துவங்குறேன் பாருங்க....
'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்'
நான் நடித்திருக்க வேண்டிய பாத்திரத்தில் ( பேச்சு வார்த்தையெல்லாம் முடிந்தும் ஏதோ சில காரணத்தால் ) பின்னர் மிகவும் மரியாதைக்குரிய மம்மூட்டி சார் நடித்தார். அவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட போது என் மனநிலையும்...அவர் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியதும் என் பிரார்த்தனைக்கும் பதிலென நினைத்தேன். பின் ஏன் அவரை வில்லன் எனத் துவங்கினீர்கள்? என வினவலாம்! முழுமையான ஒரு ஹீரோவான அவர் (even in real life) வில்லானக நடித்தால் கொன்னு குழி பறிச்சிடுவாரு. அதுக்கு latest example
'Kalamkaval'. இனி எங்கள் conversation...." என களம் காவல் படத்தில் மம்மூட்டி வில்லனாக நடித்து மிரட்டியது குறித்து அவருக்கு அனுப்பிய வாய்ஸ் மெசேஜையும் பார்த்திபன் ஷேர் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











