ஹீரோ .. ஹீரோ ..

By Staff
எனக்கு ஜோடியாக நடிக்க குதிரை மாதிரியான ஒரு பொண்ணைத் தேடி வருகிறேன் என்று இயக்குனரும், காதல் கிறுக்கனுமான நடிகர் பார்த்திபன்கூறியுள்ளார்.

பார்த்திபன் நடிக்கும் கர்த்தா படத்தின் பூஜை இன்று நடந்தது. பார்த்திபனுக்கு ஜோடியாக மீனா நடிக்கிறார். இன்னொரு ஜோடியாக புதுமுகம் ஒருவரைபோடவுள்ளார்கள்.

சத்யராஜ் கேமராவை முடுக்க, தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் கிளாப் அடிக்க படப்பிடிப்பு தொடங்கியது.

பூஜைக்குப் பின்னர் பார்த்திபன் பேசுகையில், அடுத்து சொந்தமாக பச்சைக் குதிரை என்ற படத்தை தயாரித்து இயக்கவுள்ளேன். மிகவும் ஜனரஞ்சகமான கதைஇது. கமர்ஷியலாக நல்ல வெற்றியைப் பெறும் என்று நம்புகிறேன்.

இந்தப் படத்தில் எனக்கு ஜோடியாக நடிக்க நல்லா உருண்டு திரண்டு, குதிரை மாதிரி இருக்கும் ஒரு பெண்ணைத் தேடி வருகிறேன். இந்தப் படத்தைத் தயாரிக்க பணம்தேவைப்படுகிறது. அதனால்தான் நிறையப் படங்களில் நடித்து பணம் சேர்த்து வருகிறேன்.

குடைக்குள் மழை எனக்கு பொருளாதாரரீதியாக நஷ்டத்தைக் கொடுத்தது. அதை சரி செய்து விட்டு புதுப் படத்தைத் தொடங்குவேன்.

என்னைப் பொருத்தவரை குடைக்குள் மழை தோல்விப் படமல்ல. கலிபோர்னியா திரைப்பட விழாவில் குடைக்குள் மழை பேசப்பட்டது. நமது ரசிகர்களின்ரசனை மாறி விட்டதாக கூற மாட்டேன். அவர்களது ரசனை நன்றாகத்தான் வளர்ந்து வருகிறது.

ஒரு பத்து ஆண்டுக்குப் பின்னர் இந்தப் படம் வந்திருக்க வேண்டும். இப்போது வெளியிட்டதால் ரசிகர்களுக்கு அது புரியவில்லை. கதையும், பாணியும் புதுசு.அதனால் அதை மக்கள் ஏற்கவில்லை.

புதுமுக இயக்குனர்கள் திறமை வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களது படங்களில் நடிக்க நான் தயக்கம் காட்டுவதே இல்லை. பாரதி கண்ணம்மாஎடுத்தபோது சேரனும் புதியவர்தான்.

இவர்களை புதுமுகம் என்று கூட அழைக்க கூடாது, வாய்ப்பு கிடைக்காத திறமையாளர்கள் என்றுதான் கூற வேண்டும் என்றார் பார்த்திபன்.

முன்பு ரவளிக்கு "சீமைப் பசு" என்று நாமகரணம் இட்டு அதை உலகெங்கும் பரப்பியவர் பார்த்திபன். இப்போது நல்ல "குதிரை"யைத் தேடி வருகிறார்.

குதிரையோ, கழுதையோ.. எதை வச்சு படம் எடுத்தாலும் சரி.. உங்களைத் தவிர கேமராமேன், லைட் பாய் மற்றும் காசு குடுத்து படம் பார்க்கவருபவர்கள்.. இவங்களுக்கும் புரியிற மாதிரி படத்தை எடுங்க பார்த்திபன் சார்...!..


More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X