»   »  ஹீரோ .. ஹீரோ ..

ஹீரோ .. ஹீரோ ..

Subscribe to Oneindia Tamil

ன்னீர் செல்வம் படத்தின் பூஜையை முடித்துக்கொண்டு கொஞ்சம் லேட்டாகத்தான் ஆபிஸ் வருவார் பார்த்தீபன் என்கிற தகவல்கிடைத்தது. சரி என்று பதினோரு மணிக்கு அவர் ஆபிசுகுச் சென்றோம். உள்ளே டிஸ்கஷன் நடந்து கொண்டிருக்கிறது. கொஞ்சம் வெயிட்பண்ணுங்கள் என்றனர் அலுவலகத்தில். டிஸ்கஷன் முடித்துவிட்டு வெளியே வந்தார் பார்த்தீபன்.

காக்க வச்சதுக்கு மன்னிக்கணும், வாங்க கார்ல போய்கிட்டே பேசலாம் என்று காருக்குள் நுழைந்து கொண்டார். நாமும் ஏறிக்கொள்ள,அவரது சிவப்பு நிற ஸ்போர்ட்ஸ் கார் அவரது வீட்டை நோக்கி கிளம்பியது. அவரே காரை ஓட்டிக்கொண்டு நம்மிடம் பேசஆரம்பித்தார்.

அவருடைய ரசிகர் மன்றங்கள் பற்றி பேச்சை ஆரம்பித்தார்...

என்னோட ரசிகர் மன்றத்திற்கு மனிதநேய மன்றம் என்று பெயர் மாற்றி வைத்திருக்கிறார்கள். கேட்பதற்கு சற்று சந்தோஷமாகவேஇருக்கிறது. ராசிபுரம் என்ற ஊரில் உள்ள ரசிகர்கள் என்னை அங்கே வரச்சொல்லி வேண்டுகோள் விடுத்திருந்தார்கள். சரி என்று ஒருகன்பர்ம் லெட்டர் அனுப்பி வச்சேன்.

உடனே களமிறங்கிவிட்டார்கள். சுமார் ஐந்து லட்சம் ரூபாய் கலெக்ஷன் செய்து, ஏழைத் தாய்மார்களுக்கு பதினெட்டு தையல் மிஷின்கள்,ஆறு ஏழைக் குழந்தைகளுக்கு படிப்பு, மற்றும் வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசிய செலவுகள் செய்வதற்காக அவர்களைதத்தெடுத்து இருக்கிறார்கள்.

ஊனமுற்ற ஐந்து பேருக்கு மூன்று சக்கர சைக்கிள்கள் வாங்கி வைத்திருந்தார்கள். நான் அங்கு போய் அந்த விழாவில்கலந்துகொண்ட பொழுது சற்று கண்கலங்கிவிட்டது. மனதுக்கு நிறைவாக இருந்தது. இது போக, மன்றத்திற்கு நன்கொடைகொடுத்த முப்பத்தைந்து பேருக்கும் என் கையால் கேடயம் கொடுத்தேன். மனதிற்கு ரொம்ப சந்தோஷமாய், திருப்தியாக இருந்ததுஎன்று சந்தோஷமாக சொன்னார்.

அவரே தொடர்ந்தார். நடிகர் சங்கத்திற்கு வந்த கடிதங்களை சமீபத்தில் ஒரு நாள் பிரித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். சமீபத்தில்ஊனமுற்றவர்களைப்பற்றி கிண்டல் செய்யும் விதமாக படங்கள் எடுப்பதாகவும் அப்படி வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்றுஒருவர் கடிதம் எழுதியிருந்தார்.

அந்த கடிதம் படித்த பிறகும் சில நாட்கள் அந்தக் கடிதமே மனதிற்குள் திரும்பி திரும்பி ப்ளே ஆகிக்கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் ஒரு ஊனமுற்றவர்கள் விழாவுக்கு சென்றிருந்தேன். கடிதம் பற்றி நினைவுக்கு வந்தது. வந்திருந்த கடிதம் பற்றிச்சொன்னேன். தொடர்ந்து, கண், காது, குருடு, செவிடு, கால் சரியில்லாமல் நடமாடமுடியாதவர்கள் மட்டும் ஊனமுற்றவர்கள்இல்லை. இதோ இந்த மேடையில் கை,கால்,கண், காது எல்லாம் நல்லா இருக்கிற எல்லாருமே ஊனம் தான்.

ஏன் ரஜினி காந்தே ஊனமுற்றவர்தான். காட்டுக்குள் இருக்கும் ராஜ்குமார் சாரை காப்பாற்ற முடியாத வகையில் ரஜினி சாரும்ஊனமுற்றவர் தான். ராஜ்குமார் சாரை, இதுவரை காப்பாற்ற முடியாத தமிழக, கர்நாடக அரசுகளும் ஊனமுற்றவை தான்.அதனால் நீங்கள் ஊனமுற்றவர்கள் என்று வருத்தப்படத் தேவையில்லை என்று பேசினேன் என்றார்.

உண்மை தான் பாத்தீபன்.

தொடர்ந்தார் பார்த்தீபன், பலருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. இது வரை ரோட்டைக் கிராஸ் செய்யும் போது விபத்தில் சிக்கிக்கொள்ளாதவர்கள் யார் தெரியுமா? பார்வையற்றவர்கள் தான். காரணம், அவர்களுடைய கவனம் வேறு எதிலுமே சிதறுவதில்லைஎன்பதனால் தான்.

கோடம்பாக்கம் அருகில் உள்ள ஒரு வீட்டில் கார் நின்றது.

வீடு வந்திருச்சு என்றவர் ஒரு நிமிஷம் கார்லேயே இருங்க என்றார். சில நிமிடங்களில் பார்த்தீபனின் மனைவி சீதா டிபன்காரியரோடு வெளியே வந்தார். எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டவர். மறுபடியும் காரை கிளப்பினார்.

குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுக்கணும். ஊர்ல இருந்தா, கூடவே நேரம் இருந்தா பசங்களுக்கு சாப்பாடு நானே கொண்டு போய்கொடுத்துட்டு ஊட்டிவிட்டுட்டு வர்றது உண்டு.

பள்ளிக்கூட வாசல்ல குழந்தைகளுக்காக காத்திருந்து, பள்ளிகூடம், டீச்சர், புத்தகம் எல்லாத்தையும் மறந்து அப்பான்னுகுழந்தைகள் ஓடி வர்றது இருகே...அதுல இருக்கு ஆனந்தம்.

கார் மறுபடியும் வடபழனி ரோட்டில் செல்ல ஆரம்பித்தது. ம்ம்.. என்று மட்டும் சொல்லிக் கொண்டு இருந்தோம்.ஊனமுற்றவர்கள். அதனால தான் ஹவுஸ் புல் படத்தில் கூட ஒரு கண்பார்வை தெரியாதவன் தான் பாம் இருப்பதை கண்டுபிடிப்பது போல அமைத்திருந்தேன்.

எப்ப அடுத்த படத்தை டைரக்ட் பண்ணப்போறீங்க ஸார்? என்றோம்.

பார்கிறவங்க எல்லோரும் கேட்கிற முதல் கேள்வியே இதுதான். பெயர் ரெடி. சொன்னா கேட்குதா மனசு. மற்றபடிகதாநாயகி உட்பட மற்ற விஷயங்கள் ஏதும் தீர்மானமாகவில்லை. ஜனவரியில் பண்ணலாம்னு இருக்கேன்.

கார் ராம் தியேட்டர் அருகில் நின்றது. இங்கே இறங்கிக்கிறோம் என்றோம்.

சரி அப்புறம் பார்க்கலாம் என்றவர் இன்னிக்கு ஒரு காஸெட் ரிலீஸ் பங்ஷன் இருக்கு. மறக்காம வந்திடுங்க. கேஸட் ரிலீஸ்ன்னஉடனே, காட்டுக்குள்ளேயிருந்து வீரப்பன் கேஸட்டை ரிலீஸ் பண்ணறதும், அதை முதல்வர் வாங்கிக்கறதும் தான் நினைவுக்குவருது.

என்ன செய்ய நாட்டோட நிலைமை அப்படி இருக்கு நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்துவிட்டு காரை கிளப்பினார்.

Read more about: actor, actress, cinema, movies, parthiban

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil