ஹீரோ .. ஹீரோ ..

By Staff

சென்னை:

வித்தியாசமான விளம்பரங்களால் மக்களைக் கவரக்கூடியவர் திரைபட நடிகரும்இயக்குனருமான பார்த்திபன். இவர் தனது சமீபத்திய படமான நினைக்காத நாளில்லை படத்திற்காக வைக்கப்பட்ட விளம்பரம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது..

நடிகர் பார்த்திபன் தனது படங்களுக்கான விளம்பர போர்டுகளை வித்தியாசமாகவைத்து ரசிகர்களை கவர்வதில் வல்லவர். அவர் தனது லேட்டஸ்ட் படமானநினைக்காத நாளில்லை படத்திற்காக சென்னையின் முக்கிய சாலையான அண்ணாசாலையில் மிகப் பெரிய விளம்பர போர்டு வைத்திருந்தார்.

அந்த போர்டில் பார்த்திபன் ஒரு கிராமத்தின் பின்னணியில்,குடிசைகள்,மரங்கள்,பறவைகளின் கூடுகளையும் அமைத்திருந்தார். அத்துடன்

லவ் பேர்ட்ஸ்களை கூண்டு அமைத்து அடைத்து வைத்திருந்தார்.

கூண்டில் அடைக்கப்பட்டிருந்த பறவைகளின் சத்தம் அந்த பகுதியில் செல்பவர்களின்கவனத்தை ஈர்த்தது. இந்த விஷயம் சிலரால் பிராணிவதை தடுப்பு சங்கத்திடம் எடுத்துச்சொல்லப்பட்டது.

அவர்கள் தீயணைப்புப் படை வீரர்கள் உதவியுடன் அடைக்கப்பட்டிருந்த பறவைகளைமீட்டனர்.ஆனால் அடைக்கப்பட்டிருந்த 50 பறவைகளில் 20 பறவைகளை மட்டுமேபிடிக்க முடிந்தது. மற்றவை கூண்டு திறக்கப்பட்டவுடன் பறந்து விட்டன.

ஆனால் பறவைகளின் சிறகுகள் வெட்டப்படிருந்ததால் தப்பி பறக்க முயன்ற பலபறவைகள் கீழே சாலையில் விழுந்தன. வாகனங்களில் அடிபட்டு அவை இறந்தன.

பார்த்திபன் இந்த விளம்பரத்தை ரூ 1 லட்சம் செலவில் அமைத்திருந்தார். ஆனால்வியாபார லாபத்திற்காக பிராணிகளை வதைக்கக் கூடாது என்ற சட்டம் இருப்பதுஅவருக்கு தெரியாமல் பறவைகளை விளம்பரத்திற்கு பயன்படுத்தியிருக்கிறார்.

யு.என்.ஐ.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X