ராம்சரணை வீழ்த்துவது கஷ்டம்.. சித்தப்பா பவன் கல்யாணின் ‘ஹரி ஹர வீர மல்லு’ முதல் நாள் வசூல் கணிப்பு!

ஹைதராபாத்: இந்த ஆண்டு இதுவரை வெளியான தெலுங்கு படங்கள் தொடர்ந்து சொதப்பி வருகின்றன. ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்த கேம் சேஞ்சர் திரைப்படம் தான் மிகப்பெரிய ஓபனிங் கலெக்‌ஷனை 2025ல் அள்ளியிருக்கிறது. விஷ்ணு மஞ்சு, பிரபாஸ், அக்‌ஷய் குமார், மோகன்லால் என மல்டி ஸ்டாரர்கள் நடித்த கண்ணப்பா திரைப்படத்தை டோலிவுட்டிலேயே ரசிகர்கள் கொண்டாடவில்லை.

இந்நிலையில், பவன் கல்யாணின் 'ஹரி ஹர வீர மல்லு' படத்தின் முதல் நாள் வசூல் எப்படி இருக்கும் என்கிற கணிப்பை இங்கே காணலாம் வாங்க..

Pawan Kalyan can t beat Ram Charan s Game Changer Day 1 box office with Hari Hara Veera Mallu
Photo Credit:

பவன் கல்யாண் ஆந்திராவின் துணை முதல்வர் ஆன பின்னர், அவர் நடித்துள்ள படம் திரைக்கு வருகிறது. இன்று இரவு 9 மணிக்கே ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் சிறப்பு காட்சிகளின் டிக்கெட் விலையை 600 ரூபாய் வரை உயர்த்திக்கொள்ள அந்த அந்த அரசுகள் அரசாணை பிறப்பித்துள்ளன.

பவன் கல்யாணின் பெரிய ஓபனிங்: கடைசியாக பவன் கல்யாண் நடிப்பில் வெளியான படங்களிலேயே பெரிய ஓபனிங்கை அள்ளிய படம் என்றால் அது வக்கீல் சாப் படம் தான். இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான பிங்க் படத்தை தமிழில் அஜித் குமாரை வைத்து தயாரித்த போனி கபூர் தெலுங்கில் பவன் கல்யாணை வைத்து தயாரித்து வசூல் வேட்டையாடினார். 40 கோடி ரூபாய் வரை அந்த படம் முதல் நாளில் வசூல் செய்தது. ஆனால், அந்த அளவுக்கு எல்லாம் ஹரி ஹர வீர மல்லுவின் முதல் நாள் வசூல் இருக்க வாய்ப்பே இல்லை என்கின்றனர்.

மகன் ராம்சரணை முந்த முடியாது: சித்தப்பா பவன் கல்யாண் நடித்துள்ள ஹரி ஹர வீர மல்லு திரைப்படம் 300 கோடி பட்ஜெட் என்று எல்லாம் சொல்லப்பட்டாலும் அந்த படத்துக்கு டோலிவுட்டை தாண்டி பெரிய ஹைப் எங்கேயுமே இல்லை. மேலும், ஹரி ஹர வீர மல்லு கதையே ஒரு கற்பனையான கதாபாத்திரம் என்கிற சர்ச்சை ஓடிக்கொண்டிருப்பதால், எந்தளவுக்கு வசூலை இந்த படம் ஈட்டும் என்பது சந்தேகம் தான். ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி நடிப்பில் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான கேம் சேஞ்சர் திரைப்படம் முதல் நாளில் 54 கோடி ரூபாய் வசூலை அள்ளியது குறிப்பிடத்தக்கது.

முதல் நாள் வசூல் கணிப்பு: இந்த ஆண்டு டோலிவுட்டில் வெளியான படங்களில் அதிகமாக முதல் நாள் வசூலை ஈட்டியது ராம்சரணின் கேம் சேஞ்சர் படம் தான். ஆனால், அதன் பின்னர், அது ஓடவில்லை என்பது தனிக்கதை. அதனைத் தொடர்ந்து பாலகிருஷ்ணாவின் டாக்கு மகாராஜ் திரைப்படம் 25 கோடி வசூலை முதல் நாளில் ஈட்டியது. சங்கராந்தி வஸ்துன்னாம் 23 கோடி ரூபாயும், ஹிட் 3 திரைப்படம் 21 கோடி ரூபாயும், தனுஷின் குபேரா 14.5 கோடி ரூபாயும் வசூல் செய்தன. இந்நிலையில், பவன் கல்யாணின் ஹரி ஹர வீர மல்லு திரைப்படம் 30 கோடி ரூபாய் ஓபனிங்கை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் எல்லாம் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X