பவர்புல் கதை... பவர் ஸ்டார் பவன் கல்யாண் மீண்டும் களமிறங்குகிறார்
ஹைதராபாத்: நடிகர் பவன் கல்யாண் நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது இயக்குநர் க்ரிஷ் மற்றும் ஏ.எம்.ரத்னம் கூட்டணியில் புதிய படத்தில் நடிக்கப்போகிறார். இதற்காக இயக்குனர் க்ரிஷ் ஏற்கனவே பவன் கல்யாணிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தெலுங்குப் படவுலகில் தகவல் வெளியாகியுள்ளது.
டோலிவுட்டின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் மீது ரசிகர்களுக்கு பயங்கரமான கிரேஸ் உள்ளது. தெலுங்கு திரையுலகில் மக்களின் ஆதரவை பெற்றவர். மக்களுக்காக சேவை செய்யும் நோக்கில் 2019ஆம் ஆண்டில் தேர்தலில் போட்டியிட்டார். அரசியல் ஆர்வம் இருந்ததால் பவன் கல்யாண் கடைசியாக நடித்து 2018ஆம் ஆண்டில் வெளியான படம் அக்னயாதவாசி.

அது தான் அவர் இறுதியாக நடித்த படம். அதற்கு பிறகு அவர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு அரசியலில் முழு மூச்சாக ஈடுபடப்போகிறார் என்று தகவல் வெளியாகின. அதை கேட்டு அவரது ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் இருந்த நிலையில் ஒரு நல்ல செய்தி தெலுங்கு திரையுலகில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது பவன் கல்யாண் மீண்டும் சினிமாவில் நடிக்கப்போவதாக அவருடைய நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இயக்குனர் க்ரிஷ் மற்றும் ஏ.எம்.ரத்னம் இருவரும் பவன் கல்யாணை வைத்து ஒரு படம் தயாரிக்க உள்ளார். அதற்கான பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இருவரும் பவன் கல்யாண் ஆபீஸிற்கு சென்று வருகிறார்கள் என்று தெலுங்கு படவுலகில் பரவலாக பேச்சு எழுந்துள்ளது.
ஏ.எம்.ரத்னத்தின் சூர்யா மூவிஸ் தயாரிப்பில் உருவான படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்ததால், கடுமையான கடன் சுமைக்கு ஆளாகியுள்ளார். அந்த கடன் சுமையில் இருந்து வெளி வருவதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இயக்குனர் க்ரிஷ் ஒரு புரட்சிகரமான சக்திவாய்ந்த கதை ஒன்றை வைத்துள்ளார். உண்மையில் இந்த கதை பவன் கல்யாணுக்காகவே ஸ்பெஷலாக எழுதப்பட்ட கதையாகும். மேலும் இக்கதையை இயக்குனர் க்ரிஷ் பவன் கல்யாணிடம் ஏற்கனவே விவரித்துள்ளார் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இருப்பினும் பவன் கல்யாணிடம் இருந்து இதுவரையில் எந்த ஒரு அழைப்பும் வரவில்லை என்கின்றனர். அப்படி க்ரிஷ், ஏ.எம்.ரத்னம், பவன் கல்யாண் கூட்டணியில் ஒரு படம் உறுதியானால் அது நிச்சயம் ஒரு மெகா வெற்றிப்படமாக தான் அமையும். அதிகாரபூர்வமான அறிவிப்பு வரும் வரையில் காத்திருப்போம்.


Click it and Unblock the Notifications











