Box Office: டோரா புஜ்ஜின்னு கிண்டல் பண்ணாலும்.. முதல் நாளில் அதிக வசூல் அள்ளிய ஹரி ஹர வீர மல்லு!
ஹைதராபாத்: பவன் கல்யாண் நடித்துள்ள ஹரி ஹர வீர மல்லு திரைப்படம் இதுவரை பவன் கல்யாண் நடிப்பில் வெளியான படங்களில் அதிகளவில் முதல் நாள் வசூலை அள்ளிய வக்கீல் சாப் படத்தையே வீழ்த்தி மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் வேட்டையை நடத்தியுள்ளது.
டோலிவுட் படங்கள் முதல் நாளில் உலகளவில் 200 கோடி வசூலை எடுக்கும் அளவுக்கு உயர்ந்து விட்டன. அங்கே ஒவ்வொரு ஸ்டார்ஸுக்கும் ஏகப்பட்ட தீவிர ரசிகர்கள் உள்ளனர். மசாலா படங்கள் என ட்ரோல் செய்யப்பட்டு வந்த டோலிவுட்டில் பான் வேர்ல்ட் படங்கள் உருவாகி 1000 கோடி வசூலை வரிசையாக குவித்து 2000 கோடி வசூலை நோக்கி அந்த திரையுலகம் பாலிவுட்டையே பதற வைத்து சென்றுக் கொண்டிருக்கிறது.

பவன் கல்யாண் நடிப்பில் நேற்று வெளியான ஹரி ஹர வீர மல்லு படத்தின் சிஜி காட்சிகள் எல்லாம் டோரா புஜ்ஜி சிஜி போல உள்ளதாக விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி கலாய்த்த நிலையில், படத்தின் முதல் நாள் வசூல் வேறலெவலில் வந்திருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
இந்த ஆண்டின் அதிக முதல் நாள் வசூல்: தமிழ்நாட்டில் எப்படி அஜித் குமார் படங்கள் சுமாராக இருந்தாலும் முதல் நாள் ஓப்பனிங் பாக்ஸ் ஆபீஸில் தனக்கென ஒரு கூட்டத்தை சேர்த்து வைத்திருக்கிறாரோ அதே போல ஆந்திராவில் பவன் கல்யாணுக்கு என ஒரு பெரிய கூட்டமே உள்ளது. அவர் துணை முதல்வராக மாறிய நிலையில், வெளியான இந்த ஹரி ஹர வீர மல்லு திரைப்படம் இந்த ஆண்டு இந்தியளவில் வெளியான படங்களிலேயே முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய படமாக மாறியுள்ளது.
முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?: ஏ.எம். ரத்னம் இயக்கத்தில் பவன் கல்யாண், நிதி அகர்வால், பாபி தியோல் நடிப்பில் வெளியான ஹரி ஹர வீர மல்லு திரைப்படம் புதன்கிழமை இரவு ப்ரீமியர் காட்சியுடன் சேர்த்து நேற்று செய்த வசூல் மொத்தமாக 44.20 கோடி என Sacnilk இணைதளம் தகவல் தெரிவித்துள்ளது. ப்ரீமியர் ஷோவில் 600 டிக்கெட் விலையில் திரையிடப்பட்ட ஹரி ஹர வீர மல்லு திரைப்படம் 12.7 கோடி ரூபாயும், நேற்று முதல் நாளில் 31.50 கோடி ரூபாய் என இந்தியளவில் ஹரி ஹர வீர மல்லு படத்துக்கு 44.20 கோடி ரூபாய் வசூல் குவிந்துள்ளது.
வக்கீல் சாபை விட அதிகம்: கடைசியாக பவன் கல்யாண் நடிப்பில் வெளியான வக்கீல் சாப் திரைப்படம் முதல் நாளில் 40 கோடி ரூபாய் ஓபனிங்கை பெற்றது. அதை விட அதிகமாக 44 கோடி ரூபாய்க்கும் மேல் அள்ளி மீண்டும் பவர் ஸ்டார் பவன் கல்யாண் தனது ரசிகர்களின் படையை நிரூபித்திருக்கிறார். வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இதே வேகத்தில் படம் ஓடினால் 200 கோடிக்கும் மேல் வசூலை முதல் வாரத்திலேயே அள்ளி விடும் என்கின்றனர். ஆனால், படத்துக்கு குவிந்து வரும் கலவையான விமர்சனங்கள் மற்றும் சிஜி ட்ரோல்கள் காரணமாக லைஃப் டைம் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு வருமா என்பது சந்தேகம் தான் என்றும் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











