twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா நிதி.. ஆந்திரா, தெலுங்கானா.. ரெண்டுமே முக்கியம்.. தலா 50 லட்சம் அளிக்கும் பவன் கல்யாண்!

    |

    ஹைதராபாத்: டோலிவுட் சூப்பர்ஸ்டார் நடிகர் பவன் கல்யாண் ஆந்திரா மற்றும் தெலுங்கானா அரசுக்கு கொரோனா நிவாரண நிதியாக தலா 50 லட்சம் அளிக்க முன் வந்துள்ளார்.

    Recommended Video

    கொரோனாவை முன்பே கணித்த தமிழ் படம் | TALKING 2 MUCH EP-2 | FILMIBEAT TAMIL

    சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.

    4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்பில் அவதிப்பட்டு வருகின்றனர். 21 ஆயிரம் பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    ஏன் இப்படி? வீட்டு மொட்டை மாடியில் வெறித்தன ஸ்டன்ட் பயிற்சி... வைரலாகும் பிரபல ஹீரோவின் வீடியோ!ஏன் இப்படி? வீட்டு மொட்டை மாடியில் வெறித்தன ஸ்டன்ட் பயிற்சி... வைரலாகும் பிரபல ஹீரோவின் வீடியோ!

    இந்தியாவுக்கு பூட்டு

    இந்தியாவுக்கு பூட்டு

    கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் செம ஸ்பீடில் பரவி வருகிறது. மற்ற நாடுகளை போல ஆயிரக் கணக்கில் உயிர் பலிகள் நிகழாமல் தவிர்க்க நாடு முழுவதும் டோட்டல் லாக் டவுன் செய்யப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் பிரதமர் மோடி, வரும் ஏப்ரல் 14 வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று கூறியிருந்தார்.

    கொரோனா நிதி

    கொரோனா நிதி

    உலகையே உருட்டி மிரட்டும் கொரோனா நோய் பாதிப்பில் இருந்து பொதுமக்களை காப்பாற்றவும், வீட்டில் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு தேவையானவற்றை நிறைவேற்றவும் நிறைய நிதி தேவைப்படுகிறது. ரஜினிகாந்த் 50 லட்சம் ரூபாயை ஃபெப்சி தொழிலாளர்களுக்கு வழங்கினார். பல நடிகர்களும் கொரோனா நிவாரண நிதி கொடுக்க முன் வந்துள்ளனர்.

    பவன் கல்யாண் மனிதாபிமானம்

    தெலுங்கு நடிகர் பவன் கல்யாணுக்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அதனால், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிற்கு தலா 50 லட்சம் என மொத்தம் ஒரு கோடி ரூபாயை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க உள்ளதாக பவன் கல்யாண் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

    ரசிகர்கள் பாராட்டு

    கொரோனா வைரஸ் குறித்து வீடியோ மூலம் நடிகர் பவன் கல்யாண் விழிப்புணர்வு செய்திருந்தார். பின்னர், கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களுக்கு சல்யூட் அடிக்கும் விதமாக மணி அடித்து பாராட்டினார். தொடர்ந்து, கொரோனா விழிப்புணர்வில் முன்னணியில் பவன் கல்யாண் நீட்டும் உதவிக் கரத்தை அவரது ரசிகர்களும், ஆந்திர மக்களும் பாராட்டி வருகின்றனர்.

    மற்ற நடிகர்களும்

    மற்ற நடிகர்களும்

    பல பேரிடர் காலங்களில் தானாக முன் வந்து, இந்திய நடிகர்கள் தங்களால் முயன்றதை அவ்வப்போது செய்து வந்துள்ளனர். கொரோனா வைரஸ் போன்ற நெருக்கடியான நிலையில், சினிமா பிரபலங்கள், நமக்கு என்ன என சும்மா இருக்காமல், தங்களால் இயன்ற தொகையை நிவாரண நிதியாக வழங்கி, கொரோனா வைரஸுக்கு எதிராக போராடும் அரசுக்கும் மருத்துவர்களுக்கும் உறுதுணையாக இருக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை ஆகும்.

    English summary
    Pawan Kalyan tweeted, “I will be donating Rs.50 Lakhs each to both AP and Telangana CM relief funds to fight against Corona pandemic.”
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X