Hari Hara Veera Mallu Box Office: பவன் கல்யாணுக்கு வந்த சத்ய சோதனை.. 431 சதவீதம் அதிக வசூல் எடுக்கணும்?

ஹைதராபாத்: ஏ.எம். ரத்னம், தயாகர் ராவ் மற்றும் விபின் அக்னோஹோத்ரி தயாரிப்பில் ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண், நிதி அகர்வால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ஹரி ஹர வீர மல்லு திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் வெற்றிப் பெற அவருடைய முந்தைய படத்தை விட 431 சதவீதம் அதிக வசூலை எடுக்க வேண்டும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் கணித்துள்ளன.

இந்த வாரம் ஜூலை 24ம் தேதி பகத் ஃபாசில், வடிவேலு நடித்த மாரீசன், விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடித்த தலைவன் தலைவி உள்ளிட்ட படங்களுடன் போட்டியாக பவன் கல்யாண் நடித்துள்ள ஹரி ஹர வீர மல்லு திரைப்படமும் வெளியாகிறது.

Pawan Kalyan s Hari Hara Veera Mallu Box Office must collect 431 percent high to secure blockbuster
Photo Credit:

பவன் கல்யாண் நடிப்பில் கடைசியாக சோலோ ரிலீஸ் படமாக வெளியான படம் என்றால் அது பீம்லா நாயக் படம் தான். மலையாளத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும் படத்தின் அதிகாரப்பூர்வ தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் நடித்திருந்தார். அதன் பிறகு 2023ம் ஆண்டு வெளியான ப்ரோ படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.

சமுத்திரகனி இயக்கத்தில்: சமுத்திரகனி, தம்பி ராமையா நடிப்பில் தமிழில் வெளியான வினோதய சித்தம் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து நடித்திருந்தார் பவன் கல்யாண். அதன் பின்னர், அரசியலில் ஆர்வம் செலுத்திய அவர், ஆந்திராவின் துணை முதல்வர் ஆகிவிட்டார். அவர் நடிப்பில் உருவாகி வந்த ஹரி ஹர வீர மல்லு மற்றும் ஓஜி படங்களின் ரிலீஸ் அரசியலுக்காக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அந்த படங்களை தற்போது முடித்துக் கொடுக்கும் முயற்சியில் இறங்கிய பவன் கல்யாண் ஹரி ஹர வீர மல்லு படத்தை இந்த வாரம் வெளியிட முடிவு செய்துள்ளார்.

431 சதவீதம் வசூல் வரவேண்டுமாம்: தெலுங்கில் இந்த ஆண்டு வெளியாக காத்திருக்கும் பெரிய படமாக ஹரி ஹர வீர மல்லு படம் உள்ளது. தொடர்ந்து டோலிவுட்டில் வெளியாகும் டாப் நடிகர்களின் படங்கள் குறைந்த பட்சம் 500 முதல் 1000 கோடி என வசூல் வேட்டை நடத்தி வருகிறது. பீம்லா நாயக் படம் வசூல் செய்ததை விட 431 சதவீதம் அதிக வசூல் அள்ளினால் தான் ஹரி ஹர வீர மல்லு படம் வெற்றிப் படமாக மாறும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன. பீம்லா நாயக் திரைப்படம் வெறும் 113 கோடி மட்டுமே வசூல் செய்த நிலையில், 300 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் ஹரி ஹர வீர மல்லு திரைப்படம் 600 கோடி வசூல் செய்தால் தான் வெற்றிப் படமாக கருதப்படும் என்கின்றனர்.

பெரிய ரிஸ்க்: ஆந்திராவின் துணை முதல்வராக வெற்றிப் பெற்ற பவன் கல்யாண் பாக்ஸ் ஆபீஸில் மீண்டும் தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டு இருக்கிறார். கிருஷ்ண ஜகர்லமுடி இயக்கத்தில் பவன் கல்யாண், பாபி தியோல், நிதி அகர்வால், நோரா ஃபதேகி, நர்கிஸ் ஃபக்ரி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் பவன் கல்யாணுக்கு பெரிய ரிஸ்க் தான் என்று கூறுகின்றனர். சிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்ம ரெட்டி படம் போல ஃபிளாப் ஆனால், பெரிய நஷ்டம் வரவும் வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர். ஆனால், பவன் கல்யாணின் ஃபேன் பேஸ் அவருக்கு இண்டஸ்ட்ரி ஹிட் கொடுக்க கண்டிப்பாக உதவும் என்றும் கூறுகின்றனர். இந்த வாரம் டோலிவுட்டுக்கு பெரிய பாக்ஸ் ஆபீஸ் வசூல் வேட்டை கிடைக்குமா என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X